Onetamil News Logo

சென்னை தமிழ்ச்சங்கம் மற்றும் பன்னாட்டு முருகபக்தர்கள் மாநாடு ;பாஜக தேசிய செயலர் H ராஜா பங்கேற்பு 

Onetamil News
 

சென்னை தமிழ்ச்சங்கம் மற்றும் பன்னாட்டு முருகபக்தர்கள் மாநாடு ;பாஜக தேசிய செயலர் H ராஜா பங்கேற்பு 


திருச்செந்தூர் 2019 ஆகஸ்ட் 13 ;திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கலையரங்கத்தில் சென்னை தமிழ்ச்சங்கம் மற்றும் பன்னாட்டு முருகபக்தர்கள் மாநாட்டில் பாஜக தேசிய செயலர் H ராஜா கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி புத்தகம் வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார். 
சென்னை தமிழச் சங்கம் சார்பில் பன்னாட்டு முருக பக்தர்கள் மாநாடு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகத்தில் உள்ள சிங்கப்பூர் கோவிந்தசாமி பிள்ளை கலையரங்கில் வைத்து செவ்வாய்கிழமை நடைபெற்றது. மாநாட்டிற்கு சென்னை தமிழ்ச்சங்கத் தலைவர் தியாக.இளங்கோவன் தலைமை வகித்தார்.
பா.ஜ.க. தேசியச்செயலர் ஹெச்.ராஜா உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி மாநாட்டினை தொடங்கி வைத்தார். ஆதீனங்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.பி.சண்முகநாதன், சின்னப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க புரவலர் வி.பாலசுப்பிரமணியன் வரவேற்புரையாற்றினார். புரவலர் முன்னாள் ஆட்சியர் செ.இராஜேந்திரன் தொடக்கவுரையாற்றினார். மாநாட்டை தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
மாநாட்டில் முருகர் பக்திப்பாடல்களுக்கு நடனமாடிய பழனி, மீனா கல்ச்சுரல் அகாதமி மாணவ, மாணவியருக்கு விருதுகள்; வழங்கி, தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு, இலங்கை அமைச்சர்கள் செந்தில் தொண்டைமான், வி.இராதாகிருஷ்ணன், மலேசியா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சரவணன், முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி  எஸ்.விமலா, மலேசியா தமிழ்ச்சங்க புரவலர் இரா.மாணிக்கம், ராஜ் தொலைக்காட்சி குழும இயக்குனர் ம.இரவீந்திரன் ஆகியோர் பேசினர்.
தொடர்ந்து மாநாட்டு மலரை வெளியிட்டு பா.ஜ.க. தேசியச் செயலர் ஹெச்.ராஜா பேசியதாவது,
திருச்செந்தூர் தந்தைக்கு உபதேசம் செய்த முருகப்பெருமான் குடி கொண்டுள்ள ஊர். இங்கு முருகபக்தர்கள் மாநாட்டை நடத்துவது வரவேற்கதக்கது. இந்து மதத்தில் ஏற்பாடுகள் இருக்கலாம். ஆனால் வேறுபாடுகள் கிடையாது. இந்து மதத்தை காப்பாற்ற பாதுகாக்க குழந்தைகளுக்கு கந்தசஷ்டி கவசம் ஆன்மீக நூல்கள் கற்று கொடுக்க வேண்டும்.

தமிழகம் ஆன்மீகம் பூமி தான் என்பதற்கு சாட்சியாக காஞ்சிபுரத்தில் 43 நாட்களில் ஒரு கோடி பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர். இன்னும் 5 நாட்களில் 50 லட்சம் கூட தரிசனம் செய்யவார்கள். இது தான் ஆன்மீக பூமி என்பதற்கு சாட்சி. தமிழகத்தில் 100 ஆண்டுகள் பழமையான கோயில்களை குடமுழுக்கு செய்வதற்கு எத்தனையோ வெளிநாட்டில் உள்ள பக்தர்கள் ஆர்வமாக உள்ளனர். கோயில் கும்பாபிஷேகத்திற்கும்  ஒற்றைப் பதிவு முறையில் அனுமதி வழங்க வேண்டும் என இங்குள்ள அமைச்சர்களை கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் கூறினார்.
விழாவில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசியதாவது:
சென்னை தமிழ் சங்கம் சார்பில் பன்னாட்டு முருக பக்தர்கள் மாநாடு இங்கு நடத்தப்படுவது பொருத்தமான ஒன்றாகும். இங்கு தான் கந்த சஷ்டி விழாவிற்கு பல்வேறு நாடுகளிலிருந்து முருகபக்தர்கள் வந்த விரதமிருப்பார்கள். எனவே அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் விழா நடத்துவது பாராட்டுக்குரியது. தமிழகத்தில் ஆன்மீக திருவிழாக்கள் நடக்கும் எல்லாம் அ.தி.மு.க., ஆட்சி தான் இருக்கிறது அவர் பேசினார்.

விழாவில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பேசியதாவது,
திருச்செந்தூர் கோயிலில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கடலரிப்பால் பிரகாரத்தில் மேற்கூரை இடித்து விழுந்தது. உடனடியாக அருகில் உள்ள மண்டபங்கள் அகற்றப்பட்டன. இதற்கு கிரி பிரகாரத்தில் மண்டபம் கட்டுவதற்கு மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. பிரகாரத்தின் பழமையம், தொன்மையும் மாறாமல் இருக்க சென்னை ஐகோர்ட் வழிகாட்டும் நெறிமுறைகள் அறிவுரை கிடைத்ததும் கிரி பிரகார மண்டபம் கட்டும் பணி உடனடியாக துவங்கும். அதற்கு முன்பாக ரூ.3.50 கோடி மதிப்பிட்டில் தற்காலிக பந்தல் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் உரிய அனுமதியுடன் 15 நாட்களில் துவங்கும் என்று அவர் கூறினார

 பல்வேறு ஆதீன குருமகா சன்னிதானங்கள்,சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி விமலா தமிழக மற்றும் இலங்கை அமைச்சர்கள் மற்றும் பாஜக மாவட்ட தலைவர் M. பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo