Onetamil News Logo

திருச்செந்தூரில் தந்தை இறந்த துக்கத்திலும் பிளஸ் டூ படிக்கும்  மாணவி அரசு பொதுதேர்வு எழுதினார்.

Onetamil News
 

திருச்செந்தூரில் தந்தை இறந்த துக்கத்திலும் பிளஸ் டூ படிக்கும்  மாணவி அரசு பொதுதேர்வு எழுதினார்.


திருச்செந்தூர்,  2019 மார்ச் 13 ; திருச்செந்தூரில் தந்தை இறந்த துக்கத்திலும் பிளஸ் டூ படிக்கும்  மாணவி அரசு பொதுதேர்வு எழுதினார். 
திருச்செந்தூர் இரண்டாம் சந்தி குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ஐயப்பன்(59). இவர் காங்கிரஸ் கட்சியில் நகர செயலாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி கலாவதி. இவர்களது மகள் ஜெயஸ்ரீ செண்பலட்சுமி. இவர் திருச்செந்தூர் செந்தில் முருகன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் டூ கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவு படித்து வருகிறார். தற்போது அரசு பொதுதேர்வு நடந்து வருகிறது. இந்நிலையில் ஜெயஸ்ரீ தந்தை ஐயப்பன் உடல்நிலை பாதிக்கப்பட்டு நேற்றுமுன்தினம் மாலையில் இறந்தார். இதனால் தந்தை இழந்த ஜெயஸ்ரீ தவித்துள்ளார். இருந்தாலும் துக்கத்தை கட்டுப்படுத்தி கொண்டு செந்தில்முருகன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வேதியியல் அரசு தேர்வை எழுதினார். சோகத்தையும் சொல்ல முடியாமல் தேர்வு எழுதிய மாணவி ஜெயஸ்ரீயை தேர்வு முடிந்ததும் உறவினர்கள் அழைத்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மறைந்த முன்னாள் சுதந்திர போராட்ட தியாகி மகாதேவ அய்யரின் பேத்தி தான் ஜெயஸ்ரீ என்பது குறிபிடதக்கது. 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo