Onetamil News Logo

 இந்தியாவில் முதன் முறையாக மகாத்மா காந்தி  150 பிறந்த  தின ஆண்டை முன்னிட்டு 150 நாட்களில் 150அஞ்சல் தலை கண்காட்சி  

Onetamil News
 

 இந்தியாவில் முதன் முறையாக மகாத்மா காந்தி  150 பிறந்த  தின ஆண்டை முன்னிட்டு 150 நாட்களில் 150அஞ்சல் தலை கண்காட்சி  


திருச்சி 2019 ஜனவரி 11 ;மகாத்மா காந்தி 150 பிறந்த தின ஆண்டை முன்னிட்டு திருச்சியை சார்ந்த அமிர்தா யோகமந்திரம் யோகாசிரியர் விஜயகுமார் , அவரது மனைவி வழக்கறிஞர் சித்ராவிஜயகுமார் , மகள் கீர்த்தனா உள்ளிட்டோர்  சேகரித்த மகாத்மா காந்தி தபால் தலைகளைக் கொண்டு அஞ்சல் தலை மூலம் அறிவோம்  காந்தியை  தலைப்பில்  மகாத்மா காந்தி தபால் தலை கண்காட்சியினை 2018 ஆகஸ்டு 14 ஆம் தேதி முதல் 2019 ஜனவரி 10 ஆம் தேதி வரை 150 நாட்களில் 150 கண்காட்சியினை நடத்தியுள்ளனர். 150வது கண்காட்சியானது திருச்சி அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. அருங்காட்சியக காப்பாட்சியர் பெரியசாமி தலைமை வகித்தார். மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் அம்பேஷ் உப்மன்யூ சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். கண்காட்சியில் இந்தி்யா மற்றும் உலக நாடுகள் வெளியிட்ட பொது பயன்பாடு, நினைவார்த்த தபால் தலைகள், மினியேச்சர், செட் அ நெட் தபால் தலைகள், அஞ்சல் அட்டைகள், இன்லென்ட் லெட்டர், புக் லெட்ஸ், முதல் நாள் உறைகள் மற்றும் சிறப்பு உறைகளில் சேகரித்ததைக் கொண்டு மகாத்மா காந்தி பிறப்பு,  பள்ளி, கல்லூரி படிப்பு, வழக்கறிஞர் பணி , திருமணம், தென் ஆப்பிரிக்கா பயணம், சத்தியாகிரக போராட்டம், தண்டி யாத்திரை  உட்பட பல்வேறு நிகழ்வினை அஞ்சல் துறை வெளியீடான அஞ்சல் தலைகள் மற்றும் அஞ்சல் உறைகள் கொண்டு காட்சிப்படுத்தப்பட்டு காந்திய சிந்தனைகளை, அறத்தினை, அகிம்சா வழியினையும், தேசப்பற்றையும் எடுத்துரைக்கும் வகையில்
யோகாசிரியர் விஜயகுமார் தபால் தலை சேகரிப்பை காட்சிப்படுத்தி விளக்கினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo