Onetamil News Logo

5 மாதம் காணாமல் போன முகிலன் ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார் ;திருப்பதி ரயில்வே போலீசார் கைது செய்தனர்.

Onetamil News
 

5 மாதம் காணாமல் போன முகிலன் ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார் ;திருப்பதி ரயில்வே போலீசார் கைது செய்தனர்.


திருப்பதி 2019 ஜூலை 6 ;”முகிலனின் புகைப்படத்தைப் பார்த்த நாங்கள் போலீசார் தேடப்பட்டு வரும் நபர் ஒருவரை பிடித்து வைத்து இருக்கிறோம் என்று உணர்ந்தோம்”திருப்பதியில் பிடிபட்டார் முகிலன்: தமிழக சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைப்பு
ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியைச் சேர்ந்தவர் ரெ.முகிலன் (52).இவர்  சூழலியல் செயல்பாட்டாளராவார். தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.
 தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் போலீஸார் நடத்தி துப்பாக்கிச் சூடு குறித்த சில தகவல்களை சென்னையில் கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தார். பின்னர் அவர், மதுரை செல்வதற்காக எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வந்தார். அதன் பின்னர் முகிலனைப் பற்றி எந்த தகவலும் இல்லை. அதேவேளையில் முகிலன், மதுரையும் செல்லவில்லை. மேலும் அவரது செல்லிடப்பேசியும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. முகிலன் திடீரென காணாமல்போனது தமிழக அரசியல் கட்சியினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 இதுகுறித்து எழும்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். மேலும், மனித உரிமை ஆர்வலரும், வழக்குரைஞருமான ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முகிலனை மீட்டுத் தருமாறு காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அத்துடன் தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் முகிலனை கண்டுபிடித்து தருமாறு வலியுறுத்தி வந்தனர். மேலும் சில அமைப்புகள், முகிலனை மீட்டுத் தருமாறு போராட்டத்திலும் ஈடுபட்டன.
 சிபிசிஐடி விசாரணை: இந்நிலையில் விசாரணையை விரைவுபடுத்தும் வகையிலும், முகிலனை மீட்கும் வகையிலும் இந்த வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. ஆனால், அதன் பின்னரும் முகிலனை கண்டறிவதிலும் பெரும் முன்னேற்றம் ஏற்படவில்லை. அதேவேளையில் சென்னை உயர்நீதிமன்றம், முகிலனை விரைந்து கண்டுபிடித்து மீட்கும்படி சிபிசிஐடிக்கு அறிவுறுத்தி வந்தது.
 இந்நிலையில், ஆந்திர மாநிலம், திருப்பதி ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினரிடம் முகிலன் பிடிபட்டதாக சனிக்கிழமை தகவல் பரவியது. மேலும் முகிலனை திருப்பதி ரயில் நிலையத்தில் போலீஸார் கைது செய்து அழைத்துச் செல்லும் காட்சியும், ஸ்டெர்லைட், கூடங்குளம் அணுமின் நிலையம், ஹைட்ரோ கார்பன் திட்டம் ஆகியவற்றை கண்டித்தும், மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும் முகிலன் கோஷமிடும் விடியோ காட்சியும் சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. இதற்கிடையே, முகிலன் திருப்பதியில் சிக்கியிருப்பதை தமிழக காவல்துறை உயரதிகாரிகள் இரவு உறுதி செய்தனர். இதையடுத்து சிபிசிஐடி அதிகாரிகள், முகிலனை அழைத்து வர திருப்பதிக்கு புறப்பட்டுச் சென்றனர்.
அதற்குள் ஆந்திர மாநில போலீஸாரும், ரயில்வே பாதுகாப்புப் படையினரும் முகிலனை திருப்பதியில் இருந்து ரயில் மூலம் பலத்த பாதுகாப்புடன் வேலூர் மாவட்டம், காட்பாடிக்கு அழைத்து வந்தனர். அங்கு தமிழக காவல்துறையினரிடம் முறைப்படி முகிலனை ஒப்படைத்தனர்.
தமிழக போலீஸார், முகிலனிடம் உடனடியாக விசாரணை செய்தனர். நள்ளிரவுக்கு பின்னர் முகிலன் சிபிசிஐடி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து சிபிசிஐடி அதிகாரிகள் முகிலனை ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
முகிலனை சென்னைக்கு ஞாயிற்றுக்கிழமை அழைத்து வந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கையில் சிபிசிஐடியினர் ஈடுபட்டுள்ளனர். காணாமல் போன முகிலன் 5 மாதங்களுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டு, மீட்கப்பட்டிருப்பது காவல்துறையினரிடம் நிம்மதி அடையச் செய்திருக்கிறது.
 
கைது செய்த ரயில்வே இன்ஸ்பெக்டர் பேட்டி ;
முகிலனை கைது செய்த திருப்பதி ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சாத்தையா இது தொடர்பாக கூறுகையில், ”நேற்று காலை மன்னார்குடியில் இருந்து திருப்பதிக்கு வந்து கொண்டிருந்த மன்னார்குடி எக்ஸ்பிரஸ் ரயிலில் தாடியுடன் காணப்படும் நபர் ஒருவர் அநாகரீகமாக நடந்து கொள்கிறார் என்று திருப்பதி ரயில்வே போலீசாருக்கு காலை மணி 10.40 க்கு தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் மன்னார்குடி எக்ஸ்பிரஸ் ரயிலில் முகிலன் இருந்த கம்பார்ட்மெண்டிற்கு சென்ற ரயில்வே போலீசார் அவரை அங்கிருந்து வெளியேற்ற முயன்றனர். போலீசாரை பார்த்ததும் ஆவேசம் அடைந்தவர் போல் காணப்பட்ட முகிலன் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகவும், கூடங்குளம் அணுமின் நிலைய திட்டம், ஸ்டெர்லைட் ஆலை ஆகியவற்றுக்கு எதிராக  தமிழில் கோஷம் எழுப்பியவாறு ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார். அவரை தடுத்து நிறுத்தி ரயில்வே காவல் நிலையத்திற்கு கொண்டுவந்தோம்.
ஆனால், எங்களுக்கு ஆந்திர சகோதரர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கோஷம் போட்டார். முகிலன் போட்ட கோஷத்தை புரிந்துகொள்ளமுடியாத நாங்கள் அவரை மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கருதி ரயில்வே காவல் நிலையத்தில் உட்கார வைத்திருந்தோம்.நாங்கள் கொடுத்த மதிய உணவை சாப்பிட்ட அவர் என்னுடைய ஊர் காட்பாடி என்று கூறினார். எனவே அவரை காட்பாடிக்கு ரயிலில் அனுப்பி வைக்க முடிவு செய்தோம். இந்த நிலையில் திருப்பதி ரயில்வே காவல் நிலையத்தில் முகிலன் இருப்பது பற்றிய தகவல் அறிந்த தமிழக சி.பி.சி.ஐ.டி போலீசார் எங்களை தொடர்பு கொண்டு விபரம் கேட்டனர்.
சற்று நேர குழப்பத்திற்கு பின் தமிழக சிபிசிஐடி போலீசார் அனுப்பி வைத்த முகிலனின் புகைப்படத்தைப் பார்த்த நாங்கள் போலீசார் தேடப்பட்டு வரும் நபர் ஒருவரை பிடித்து வைத்து இருக்கிறோம் என்று உணர்ந்தோம்.
இந்த நிலையில் தமிழக சிபிசிஐடி போலீசாரின் வேண்டுகோளுக்கு ஏற்ப முகிலனை ரயில்வே போலீசாரின் பலத்த பாதுகாப்புக்கு இடையே ரயிலில் காட்பாடிக்கு அனுப்பிவைத்தோம். தமிழ் நாடு போலீசார் எங்களை தொடர்பு கொள்ளும் வரை அவரை பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியாது” என்று கூறினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo