Onetamil News Logo

திருப்போரூர் திமுக எம்எல்ஏ இதயவர்மன் இன்று கைது ;பரபரப்பு நடந்தது என்ன? 

Onetamil News
 

திருப்போரூர் திமுக எம்எல்ஏ இதயவர்மன் இன்று கைது ;பரபரப்பு நடந்தது என்ன? 


திருப்போரூர்: ஜூலை 12,ஞாயிற்றுக்கிழமை  2020:   துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக திமுக எம்எல்ஏ இதயவர்மன் திருப்போரூரில் கைது செய்யப்பட்டுள்ளார். 
திருப்போரூர் கோஷ்டி மோதல் சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி. கண்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-கோஷ்டி மோதல் சம்பவம் தொடர்பாக 4 டிஎஸ்பிக்கள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். குமார் என்பவர் தனது பட்டா நிலத்தில் கால்வாய் அமைப்பதாக புகார் அளித்திருந்தார். வாய்தகராறு முற்றி இருதரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டனர்.திருப்போரூர் எம்எல்ஏவும், அவரது தந்தையும் துப்பாக்கியை பயன்படுத்தியுள்ளனர். கோஷ்டிமோதல் தொடர்பாக இதுவரை இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.திருப்போரூர் கோஷ்டி மோதல் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக எம்.எல்.ஏ மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
நடந்தது என்ன?                                                                                                                          திருப்போரூர் கேளம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அமமுக நிர்வாகி தாண்டவமூர்த்தி கோவில் நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சித்தபோது, திமுக எம்எல்ஏ இதயவர்மனின் தந்தை லட்சுமிபதி மற்றும் சிலர் அவரை தடுத்து நிறுத்த முயன்றனர்.அப்போது இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பானது. இதில், லட்சுமிபதி மற்றும் சிலருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டது. 
 இதன் பின்னர் எம்எல்ஏவின் தந்தை லட்சுமிபதி, தான் வைத்திருந்த துப்பாக்கியால் எதிர் தரப்பினரை நோக்கி சுட்டுள்ளார்.இதில், ரியல் எஸ்டேட் அதிபரும் ஒருவர் படுகாயமுற்ற நிலையில் கேளம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்நிலையில், துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக எம்எல்ஏ இதயவர்மன் மற்றும் அவரது தந்தை லட்சுமிபதி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதயவர்மன் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது,இந்த விவகாரத்தில் எம்எல்ஏ இதயவர்மனை சென்னை மற்றும் செங்கல்பட்டு காவல்துறையினர் தேடி வந்த நிலையில், இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 
 

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo