Onetamil News Logo

திருப்பூர் ,அமிர்த வித்யாலயம் பள்ளியில் பொங்கல் விழா 

Onetamil News
 

திருப்பூர் ,அமிர்த வித்யாலயம் பள்ளியில் பொங்கல் விழா 


திருப்பூர் , 2020 ஜன. 13; அமிர்த வித்யாலயம் பள்ளியில் பொங்கல் விழா,முதல்வர் மற்றும் சிறப்பு விருந்தினர் கையினால் தீபம் ஏற்றும்  நிகழ்ச்சியுடன் விழா இனிதே தொடங்கியது..
அதனைத் தொடர்ந்து இசை மாணவர்களின் இனிமையான குரலில்,இறை வாழ்த்துப் பாடல் இசைக்கப் பட்டது.
விழாவிற்கு வருகை புரிந்த சிறப்பு விருந்தினர் மற்றும் முதல்வர்,ஆசிரியர் பெருமக்கள், மாணவச் செல்வங்களை வரவேற்கும் விதமாக .வரவேற்புரை வழங்குதல் நிகழ்ச்சி 
ஏழாம் வகுப்பு பயிலும் மாணவி செ.ரித்திகா அவர்கள் வரவேற்புரை நிகழ்ச்சி வழங்கினார்.
பொங்கல் விழாவின் சிறப்பம்சமாக ,எம் பள்ளி மழலைச் செல்வங்களின் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தொடக்க மற்றும் உயர்நிலைப் பயிலும் மாணவிகளான ஷிவானி,வைஷ்ணவி அவர்களின் தமிழர் திருநாள் பற்றிப் பேச்சுத் திருவிழா நடைபெற்றது.  
விழாவின் முக்கிய நிகழ்வாக முனைவர்.இ.சேனாவரையன் அவர்களின் தலைமையில் பொங்கல் விழாவினை மகிழ்ச்சியாகக் கொண்டாடுபவர்கள் கிராமத்து மக்ககளா?நகரத்து மக்களா?என்ற தலைப்பில் ஆசிரியப் பெரு மக்கள் இரு அணியாகப் பங்கு பெற்ற பட்டி மன்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து எம் பள்ளி முதல்வர் அவர்களின் பொங்கல் விழாவினைப் பர்றிய சிறப்புரையாற்றுதல் நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது.
விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்து விழாவை சிறப்பித்துத் தந்த சிறப்பு விருந்தினர் முனைவர் .இ.சேனாவரையன் அவர்கள்எம் ஆசிரியப் பெருமக்களுக்கும்.மாணவச் செல்வங்களுக்கும் பொங்கல் விழாவைப் பற்றிய பேருரையாற்றிய  நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவின் இறுதி நிகழ்வாக சிறப்பு விருந்தினர் அவர்களுக்கு .எம் பள்ளி முதல்வர் சிறப்புப் பரிசை வழங்கினார்.
7 ஆம் பயிலும் எம் பள்ளி மாணவி மதுஸ்ரீ நன்றியுரைக் கூறுதல் நிகழ்வும் ,சாந்தி மந்திரம் . மற்றும்  தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவுற்றது.       

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo