Onetamil News Logo

மங்கலம் அமிர்த வித்யாலயத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தூய்மை இந்தியா பணி

Onetamil News
 

மங்கலம் அமிர்த வித்யாலயத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தூய்மை இந்தியா பணி


திருப்பூர்  2019 அக்டோபர் 2 ;மங்கலம் அமிர்த வித்யாலயத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தூய்மை இந்தியா பணி இன்று நடந்தது.
திருப்பூர் மங்கலம் அமிர்த வித்யாலயத்தில் தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் 150- வது பிறந்த நாளை முன்னிட்டு காந்தி ஜெயந்தி விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

பள்ளி வளாகத்தில் காலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளியின் முதல்வர் வித்யாசங்கர் அவர்கள் முன்னிலை வகித்தார்.அவர் தேசிய கொடியை ஏற்றி வைத்து காந்தியடிகளின் அரும் பெரும் தியாகங்களைப் பற்றி மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார்.தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் சித்ராமணி  'ரகுபதி, ராகவ ராஜாராம்' என்ற பாடலை ராகத்துடன் பாடினார்.காந்தி ஜெயந்தியை தூய்மை இந்தியா நிகழ்வாகவும் பள்ளியில் கொண்டாடினர்.
பள்ளி முதல்வர் வித்யாசங்கர் தலைமையில் மேனிலைப் பொறுப்பாளர் சேகர் முன்னிலையில் பள்ளியின் மாணவர்கள் சுற்றுப்புறங்களில் தூய்மைப் பணியினை மேற்கொண்டனர்.பள்ளியின் மாணவர்கள் காந்தியடிகளின் தியாகத்தையும், சிறப்பினையும், பெருமையினையும், பேசியும், பாடியும் நிகழ்ச்சியைச் சிறப்புச் செய்தனர். உடற்பயிற்சி ஆசிரியர் காளிமுத்து இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார்.
விழா நிகழ்வில் பள்ளியின் ஆசிரியர்களும் , அலுவலக ஊழியர்களும் பங்கேற்றனர். இறுதியாக தேசிய கீதம் பாடி நிகழ்ச்சி நிறைவடைந்ததது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo