Onetamil News Logo

மங்கலம் அமிர்த வித்யாலயம் மாணவர்களின் நெகிழி ஒழிப்பு ஊர்வலம் !

Onetamil News
 

மங்கலம் அமிர்த வித்யாலயம் மாணவர்களின் நெகிழி ஒழிப்பு ஊர்வலம் !


திருப்பூர்,  2019 செப் 24 ; திருப்பூர், மங்கலம் அமிர்த வித்தியாலயத்தில் சத்குரு மாதா அமிர்தானந்தமயி தேவியின் 66-வது பிறந்த தின விழா "அமிர்த வருஷம் 66 " என்னும் வகையில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது .
காலையில் தொடங்கிய விழாவிற்கு பள்ளியின் முதல்வர் வித்யாசங்கர் அவர்கள் தலைமை ஏற்றார் .

சிறப்பு விருந்தினராக மங்கலம் ஆரம்பசுகாதார மருத்துவமனை மருத்துவ அலுவலர் டாக்டர் பொன்னியின் செல்வன் அவர்கள் வருகை   தந்திருந்தார்.
சத்குரு மாதா அமிர்தானந்தமயி தேவியின் திருவுருவப்படத்திற்கு முன் திருவிளக்கு ஏற்றி பூஜைகள் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பள்ளியில் நடந்து முடிந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. சிறப்பு விருந்தினர் மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கினார். சிறப்பு விருந்தினர் தனது உரையில் “நோய்கள் எப்படி நம்மைத் தாக்குகின்றன - அதனைத் தடுப்பது எப்படி? நோய் நொடிகள் நம்மைத் தாக்காமல் இருக்க, நாமும் நாமிருக்கும் இடமும் தூய்மையாக வைத்துக்கொள்வது அவசியம் என்று பேசினார்.

அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களின் “நெகிழி ஒழிப்பு” “உடல் நலம் பேணல்” (FIT IN INDIA) குறித்த விழிப்புணர்வு ஊர்வலம், பள்ளியில் இருந்து புறப்பட்டு மங்கலம் நான்கு வழிச்சாலையை அடைந்து, அங்கிருந்து பல்லடம் சாலை வழியாக அரசுமேனிலைப் பள்ளிவரைச் சென்று, அங்கிருந்து அமிர்தவித்யாலயம் பள்ளியை வந்தடைந்தது.“ஒழிப்போம் ஒழிப்போம் நெகிழியை ஒழிப்போம் - காப்போம் காப்போம் உடல் நலத்தைக் காப்போம்” என்ற பெருங்கோசம் பொதுமக்களை ஆர்வத்தோடு பார்க்கச் செய்தது. விழிப்புணர்வு ஊர்வலத்திற்கு மங்கலம் காவல்துறையினர் சிறப்பாக பாதுகாப்பு வழங்கினர்.பள்ளியின் ஆசிரியர்கள் மாணவர்களை நெறிப்படுத்தி விழிப்புணர்வு ஊர்வலத்தை வெற்றி பெறச் செய்தனர். 

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo