Onetamil News Logo

அஇஅதிமுக 48வது ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி ;  தூத்துக்குடியில்17 அமைச்சர்கள் கலந்துகொள்ளும் விழா;தெற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ இடத்தை நேரில் பார்வையிட்டு விழாவை தொடங்கி வைத்தார். 

Onetamil News
 

அஇஅதிமுக 48வது ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி ;  தூத்துக்குடியில்17 அமைச்சர்கள் கலந்துகொள்ளும் விழா;தெற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ இடத்தை நேரில் பார்வையிட்டு விழாவை தொடங்கி வைத்தார்.   


 தூத்துக்குடி 2019 அக்டோபர் 16 ;அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவன தினம் நாளை அக்டோபர் 17ம் தேதி கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி தூத்துக்குடியில் அதிமுக 48வது ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி மற்றும் 17 அமைச்சர்கள் கலந்துகொள்ளும் விழாவாக தூத்துக்குடியில் கொண்டாடப்படுகிறது. தூத்துக்குடி மாநகராட்சி பழைய முனிசிபல் அலுவலகத்தில் அமையப் பெற்றுள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவச்சிலை மற்றும் பேரறிஞர் அண்ணா திருவுருவச்சிலை மேலும் அங்கே அமைக்கப்பட உள்ள புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவப் படம் ஆகியவற்றிற்கு அமைச்சர் பெருமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.
அதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ பார்வையிட்டு அதற்கான விழா ஏற்பாடுகளை துவக்கி வைத்தார். நிகழ்வின்போது முன்னாள் மாவட்ட செயலாளர் பி.ஏ.ஆறுமுகநயினார், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன் மாவட்ட வக்கீல் பிரிவு தலைவர் முள்ளக்காடு செல்வகுமார் மாவட்ட அரசு வழக்கறிஞர் சுகந்தன் ஆதித்தன் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் சத்யாலட்சுமணன் முன்னாள் நகர்மன்றத் தலைவர் மனோஜ்குமார் வட்டக் கழக செயலாளர் ஜெய்கணேஷ் முன்னால் மாமன்ற உறுப்பினர்கள் கோல்டன் ஆனந்தகுமார் நகர இளைஞர் இளம்பெண்கள் பாசறை துணை தலைவர்கள் சுந்தரேஸ்வரன் பரிபூரண ராஜா சகாயராஜா தங்க செல்வம் பாலஜெயம் வட்ட பிரதிநிதி சனிக்குலாஸ் சரவணபெருமாள் ஆனந்த் உட்பட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo