Onetamil News Logo

தூத்துக்குடி அதிமுக தெற்கு மாவட்ட மகளிர் அணி பூத் குழு அமைப்பு மற்றும் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ;எஸ்.பி.சண்முக நாதன் எம்.எல்.ஏ.,பங்கேற்பு

Onetamil News
 

தூத்துக்குடி அதிமுக தெற்கு மாவட்ட மகளிர் அணி பூத் குழு அமைப்பு மற்றும் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ;எஸ்.பி.சண்முக நாதன் எம்.எல்.ஏ.,பங்கேற்பு


 தூத்துக்குடி 2020 நவம்பர் 29 ;தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சரும் தூத்துக்குடி அதிமுக தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ்.பி.சண்முக நாதன் எம்.எல்.ஏ.,தலைமையில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட மகளிர் அணி பூத் குழு அமைப்பு மற்றும் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்,இன்று காலையில் நடைபெற்றது.
தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலையில் உள்ள தனியார்  திருமண மண்டபத்தில் இன்று காலை 11 மணி அளவில் நடை பெற்ற தூத்துக்குடி அதிமுக தெற்கு மாவட்ட மகளிர் அணி பூத் குழ ஆலோசனை கூட்டத்தில் கலந்து  கொண்ட தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் எம்.எல்.ஏ.பேசியதாவது:- 
அதிமுக-வினர்  தேர்தல் பணியில் அதிக முனைப்பு காட்டி பூத் - களில் தேர்தல் களத்தில் நாம் துணிச்சலாக செயல்படவேண்டும். வெற்றி மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படவேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.
பின்பு இக்கூட்டத்தில் ஏக மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:-
தேர்தல் பணிகளில் கழக மகளிர்களுக்கு பூத்களில் பணியாற்ற வாய்ப்பு வழங்கிய கழக ஒருங்கிணைப்பாளர்கள் மாண்புமிகு தமிழக நிரந்தர முதலமைச்சர் டாக்டர் எடப்பாடியார் அவர்கள், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் ஆகியோருக்கு இக்கூட்டம்  தன்நெஞ்சார்ந்த நன்றியையும் பாராட்டுதலையும்
தெரிவித்துக்கொள்கிறது.
தூத்துக்குடியில் பல்வேறு வளர்ச்சி பணிகளை தொடங்கி வைக்க வருகை தந்த முதல்வர் எடப்பாடியார் , தூத்துக்குடி சுந்தர் நகரை சார்ந்த மாற்றுதிறனாளி  மாரீஸ்வரி  கோரிக்கை மனு வழங்கிய  ஒரு மணி நேரத்தில்  முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் வார்டு மேலாளர் பணியை வழங்கி, மாற்றுதிறனாளி பெண் இனத்தை காப்பாற்றியமைக்கு இக்கூட்டம் தன் நன்றியையும் பாராட்டுதலையும் பணிந்து தெரிவித்துக்கொள்கிறது
அரசு பள்ளிகளில் படித்த மாணவ-மாணவிகளுக்கு மருத்துவம் பயில 7.5% இடஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்தோடு, அவர்களின் கல்வி செலவையும் அரசே ஏற்கும் என அறிவித்த மக்களின் முதல்வர் எடப்பாடியாருக்கு இக்கூட்டம் நன்றியை பணிந்து சமர்பிக்கிறது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இரா.சுதாகர், மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் வக்கீல் முள்ளக்காடு செல்வகுமார்,  திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் செல்வி வடமலைப்பாண்டியன் ,மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் ஏசாதுரை, மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வக்கீல் வீரபாகு, மாவட்ட மகளிரணி செயலாளர் குருத்தாய், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் டேக் ராஜா, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் கே.ஜே. பிரபாகர், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் தனராஜ், மாவட்ட மாணவரணி செயலாளர் பில்லா விக்னேஷ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அருண் ஜெபக்குமார், பகுதி கழக செயலாளர்கள் வடக்குப் பகுதி பொன்ராஜ், மத்திய வடக்கு பகுதி ஜெய்கணேஷ், தெற்குப் பகுதி ராமகிருஷ்ணன், மத்திய தெற்கு பகுதி நட்டார்முத்து, ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய செயலாளர் அழகேசன், கருங்குளம் ஒன்றிய செயலாளரும் துணைச் சேர்மனுமான செக்காரக்குடி லட்சுமன பெருமாள், மாவட்ட அரசு குற்றவியல் கூடுதல் வழக்கறிஞர் கோமதி மணிகண்டன், மத்திய வடக்கு பகுதி எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் திருச்சிற்றம்பலம், முன்னாள் நகராட்சி சேர்மன் மனோஜ் குமார், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச்செயலாளர் ஜோதிடர் ரமேஷ் கிருஷ்ணன், அண்ணா தொழிற்சங்க இணைச்செயலாளர் கல்விகுமார், லட்சுமணன், துணைச்செயலாளர் ரயில்வே மாரியப்பன், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை தலைவர் சுந்தரேஸ்வரன்,  பொருளாளர் பரிபூரண ராஜா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர்கள் சகாயராஜா, சோபன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் வக்கீல் முனியசாமி, துணைச்செயலாளர் சரவண பெருமாள்,  மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் வலசை வெயிலுமுத்து, துணைத் தலைவர் பிராங்கிளின் ஜோஸ்,  மத்திய வடக்கு பகுதி எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் டைகர் சிவா, மத்திய வடக்கு பகுதி சிறுபான்மை பிரிவு செயலாளர் ஹஸன், கிழக்கு பகுதி மீனவர் அணி செயலாளர் வசந்த், மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவர் இந்திரா, பகுதி மகளிர் அணி செயலாளர் ஷாலினி, தெற்கு பகுதி அம்மா பேரவை செயலாளர் சுடலைமணி, வட்டக் கழக செயலாளர்கள் முனியசாமி, ராமச்சந்திரன், முத்துவீரன், சங்கர், சந்திரசேகர், கொம்பையா, மனுவேல் ராஜ், வெங்கடேஷ், முபாரக் ஜான், அருண் ராஜா, ஜெயபால், ஜெகதீஸ்வரன், சிக்ஸ்டன்,  அசோகன், உலகநாத பெருமாள், பிரபாகரன், பூரணச்சந்திரன், வட்ட பிரதிநிதிகள் ரமேஷ், ராஜ்குமார், சுப்பிரமணியன் ஸ்மைலா  உட்பட திரளான கழகத்தினர் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo