Onetamil News Logo

தூத்துக்குடி விமான நிலையத்தில் சுற்றுலா மற்றும் ஊரக வளர்ச்சி” என்ற தலைப்பில் இணைவழி கருத்தரங்கு;தூத்துக்குடி விமான நிலைய இயக்குநர்  ந.சுப்பிரமணியன் பங்கேற்பு 

Onetamil News
 

தூத்துக்குடி விமான நிலையத்தில் சுற்றுலா மற்றும் ஊரக வளர்ச்சி” என்ற தலைப்பில் இணைவழி கருத்தரங்கு;தூத்துக்குடி விமான நிலைய இயக்குநர்  ந.சுப்பிரமணியன் பங்கேற்பு 


தூத்துக்குடி 2020 செப் 28 ; ’உலக சுற்றுலா தினம் - 2020” ‘உலக சுற்றுலா தினம் நேற்று உலகமெங்கும் கொண்டாடப்பட்டது. 
இந்நிகழ்ச்சியையொட்டி தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறையின் சார்பில் சுற்றுலா ஆணையர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் அறிவுரையின்படி, தூத்துக்குடி விமான நிலையத்தில் கொண்டாடப்பட்டது.  இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக வருகை புரிந்த சுற்றுலாபயணிகளுக்கு மாலை அணிவித்து இனிப்புகள் மற்றும் சுற்றுலா கையேடு வழங்கி வரவேற்பு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ,மாணவியர்களுக்கு ‘சுற்றுலா மற்றும் ஊரக வளர்ச்சி” என்ற தலைப்பில் இணைய வழியில்  தூத்துக்குடி விமான நிலையத்தில் திருவைகுண்டம் ஸ்ரீ குமரகுருபரர் கலைக் கல்லூரி முதல்வர் முனைவர். ஆர்.இரவிச்சந்திரன் தலைமையில் மாணவ/மாணவியர்களிடையே இணைவழி கருத்தரங்கு நடைபெற்றது.  இந்நிகழ்ச்சிகளில், தூத்துக்குடி விமான நிலைய இயக்குநர்  ந.சுப்பிரமணியன், மேலாளர்  செ.ஜெயராமன், விமான நிலைய பணியாளர்கள், விமான நிலைய காவல் துறை ஆய்வாளர்  செ.விமலா மற்றும்  திருவைகுண்டம் ஸ்ரீ குமரகுரபரர் கலைக் கல்லூரி பேராசிரியர் சே.போஸ் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
                  இணைய வழி கருத்தரங்கில் பங்கேற்ற மாணவ/மாணவியர்களுக்கு காலை12.00 மணியளவில் வாகைக்குளம் விமான நிலைய வளாகத்தில் நடைபெற்ற உலக சுற்றுலா தின விழாவில் தூத்துக்குடி விமான நிலைய இயக்குநர்  ந.சுப்பிரமணியன் அவர்கள் சான்றிதழ் வழங்கி வாழ்த்துரை வழங்கினார்கள்.  தூத்துக்குடி விமான நிலைய மேலாளர்  செ.ஜெயராமன் , வரவேற்புரை வழங்கினார்கள்.  மாவட்ட சுற்றுலா அலுவலர் க.சீனிவாசன் அவர்கள் நன்றியுரை வழங்கினார்கள்.
                  தூத்துக்குடி விமான நிலையத்தில் வருகைதந்த சுற்றுலாப் பயணிகளுக்கு தூத்துக்குடி மாவட்ட சுற்றுலா அலுவலகம் மற்றும் ஓட்டல்கள் ஜி.ஆர்.டி. ரீஜென்ஸி மற்றும் கனி ரெசிடென்ஸி ஆகியவை சார்பாக இனிப்புகள் மற்றும் மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி விமான நிலைய இயக்குநர்  ந. சுப்பிரமணியன், சுற்றுலாவின் முக்கியத்துவத்தை பற்றி கூறும் போது, தூத்துக்குடி விமான நிலையத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் கோவிட்-19 பரவல் காரணமாக விமான போக்குவரத்து நடைபெறவில்லை.  தொடர்ந்து, மே மாதத்தில் 350 விமான பயணிகளும், ஜூன் மாதத்தில் 3,933 விமான பயணிகளும், ஜூலை மாதத்தில் 7,514 விமான பயணிகளும், ஆகஸ்ட் மாதத்தில் 11,811 விமான பயணிகளும் பயணம் செய்துள்ளனர் என்று தெரிவித்தார்.  முடிவில் இந்த உலக சுற்றுலா தின விழாவை தூத்துக்குடி விமான நிலையத்தில் நடைபெற ஒத்துழைப்பு நல்கிய தூத்துக்குடி மாவட்ட சுற்றுலாத்துறைக்கு நன்றி தெரிவித்தார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo