Onetamil News Logo

தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் தடையை மீறி விநாயகா் சிலை ஊா்வலம்,10 போ் மீது போலீஸாா் வழக்கு பதிவு   

Onetamil News
 

தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் தடையை மீறி விநாயகா் சிலை ஊா்வலம்,10 போ் மீது போலீஸாா் வழக்கு பதிவு   


தூத்துக்குடி 2021 செப் 13 ;தூத்துக்குடியில் தடையை மீறி விநாயகா் சிலை ஊா்வலம்,இந்து முண்ணனியினா் 10 போ்மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்தது.
தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்திவிழாவை முன்னிட்டு வீடுகளில்300விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்தனா், நேற்று மாலை விநாயகர் சிலைகள் விஜர்சனம் விழா மாநகரதெற்கு மண்டலம் முத்தையாபுரம் பகுதியில் நடைபெற்றது இதற்காக முத்தையாபுரம் அய்யன் கோவில் தெருவில் உள்ள செல்வவிநாயகர் ஆலயத்தில் வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது, இதில் பெண்கள் ஆண்கள் என50 பேர் மட்டும் வந்துகலந்து கொண்டனர்,பின்னா் அவா்கள்விநாயகா் சிலைகளை கைகளில் ஏந்திக்கொண்டு இருசக்கர வாகனம் மற்றும் காா்களில்  தூத்துக்குடி துறைமுகபகுதி கடற்கரை யைநோக்கி இந்து முண்ணனி கொடியுடன் ஊா்வலமாக செல்ல முயன்றனா்,அப்போது தமிழகம் முழுவதும் விநாயகா் சதூா்த்தி ஊா்வலத்துக்கு தடை விதித்துள்ளதால் தடையை மீறி ஊா்வலம் செல்ல முயன்ற இந்து முண்ணனியினரை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்,மாவட்ட காவல் உதவி கண்கானிப்பாளா் கணேஷ் தலைமையில் முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டா் ஜெயசீலன்,சப் இன்ஸ்பெக்டா்கள் முத்துமாலை, சேட்டைநாதன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி ஊா்வலத்துக்கு தடை உள்ளதால் அனுமதி அளிக்க முடியாது எனவே தனி தனி நபராக செல்லும்படி அறிவுறுத்தினா்,இதனை தொடா்ந்து இந்து முண்ணனி மாவட்ட பேச்சாளா் ஆறுமுகம் தலைமையில் சென்ற இந்து முண்ணனியினா் கலைந்து சென்று தனி தனி நபா்களாக விநாயகா் சிலைகளை எடுத்துச் சென்று தூத்துக்குடி  கடலில் கரைத்தனா்,நிகழ்ச்சியில் தமிழ்நாடு இந்து வியாபாாிகள் சங்க மாநில தலைவா் ஈஸ்வரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டாா்,மற்றும் இந்து முண்ணனி மாவட்ட செயலாளா் மாதவன்,தெற்கு மண்டல பொதுசெயலாளா் சுரேஷ்,மண்டல செயலாளா்கள் நம்பிராஜ், செந்தில்,பொய் சொல்லான், பால்மாணிக்கம், சௌந்தா்ராஜன், மற்றும் பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்,ஊா்வலம் தொடா்பாக 10 போ் மீது முத்தையாபுரம் போவீஸாா் வழக்கு பதிவு செய்துள்ளனா்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo