Onetamil News Logo

பாலியல் வழக்கு குற்றவாளிக்கு தூத்துக்குடி போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 30,000/- அபராதம் விதித்து தீர்ப்பு   

Onetamil News
 

பாலியல் வழக்கு குற்றவாளிக்கு தூத்துக்குடி போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 30,000/- அபராதம் விதித்து தீர்ப்பு   


தூத்துக்குடி 2020 நவம்பர் 23 ;தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர்  காவல் நிலைய பாலியல் வழக்கு குற்றவாளிக்கு தூத்துக்குடி போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 30,000/- அபராதம் விதித்து தீர்ப்பு. இவ்வழக்கை சிறப்பாக புலன் விசாரணை செய்த காவல் ஆய்வாளருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கடந்த 2018 ம் வருடம் ஸ்ரீவைகுண்டம், நாலுமாவடி பகுதியிலுள்ள பள்ளியில் படித்து வந்த 14, 12 மற்றும் 11 வயதுள்ள சிறுமிகளுக்கு அப்பள்ளியில் கைதொழில் ஆசிரியராக பணியாற்றி வந்த குரும்பூர், சண்முகபுரம் பகுதியை சேர்ந்த கோயில்பிள்ளை மகன் ராஜ்குமார் முத்துபாண்டி (52) என்பவர் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். 
இது குறித்து ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமார் முத்துபாண்டியை கைது செய்தனர். இவ்வழக்கை ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர்  காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி. ஞானபிரகாசி என்பவர் புலன் விசாரணை செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார். 
இவ்வழக்கு தூத்துக்குடி போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த மதிப்பிற்குரிய நீதிபதி  குமார் சரவணன் அவர்கள் இன்று குற்றவாளி ராஜ்குமார் முத்துபாண்டி என்பவருக்கு 5 ஆண்டுகள் சிறை  தண்டனையும், ரூபாய் 30,000/-அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
 இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஞானபிரகாசி, இவ்வழக்கின் சாட்சிகளை துரிதமாக ஆஜர்படுத்தி எதிரிக்கு விரைவாக தண்டணை வாங்கி கொடுக்க ஆவண செய்த தற்போதைய ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர்  காவல் நிலைய காவல் ஆய்வாளர் லெட்சுமி பிரபா மற்றும் விசாரணைக்கு உதவியாக இருந்த முதல் நிலை பெண் காவலர் ஹெப்சி ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo