Onetamil News Logo

தூத்துக்குடி மாவட்டத்தில் 5 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி ;மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, செய்தியாளர்களிடம் கூறினார்.

Onetamil News
 

தூத்துக்குடி மாவட்டத்தில் 5 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி ;மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, செய்தியாளர்களிடம் கூறினார்.


தூத்துக்குடி 2020 ஏப்ரல் 3 ;தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக சங்கு கூட்டரங்கில் கொரோனா வைரஸ் நோய் தொற்று குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, செய்தியாளர்களிடம் கூறினார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக சங்கு கூட்டரங்கில் கொரோனா வைரஸ் நோய் தொற்று குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, செய்தியாளர்களிடம் இன்று (03.04.2020) தெரிவித்ததாவது: 
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுப்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நமது மாவட்டத்தில் 5 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் சுற்றி சுமார் 5 கிலோமீட்டர் கண்டம் நேசன் சோன்- ஆகவும் மற்றும் 3 கிலோமீட்டர் பப்பர் சோன்-ஆகவும், கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் மற்றும் வீடு வீடுகளாக அலுவலர்கள் சென்று உடல் நலம் குறித்த தகவல்கள் சேகரித்து வருகின்றனர். இந்த குழுவில் சுகாதார மேற்பார்வையாளர், வருவாய் துறை அலுவலர்கள், காவல் துறை அலவலர்கள் மற்றும் ஊரக, உள்ளாட்சி துறை பணியாளர்களும் கடந்த 2 நாட்களாக ஈடுபட்டு வருகிறார்கள்.   இப்பணிகள் இன்னும் 14 நாட்கள் தொடர்ந்து மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இவர்களின் தொடர்பில் உள்ள முதல் நிலை தொடர்பாளர்கள் சுமார் 30 நபர்களும், இரண்டாம் நிலை தொடர்பாளர்கள் 100 நபர்களை கண்டறியப்பட்டு அவர்களை தனிமைப்படுத்தப்பட்டு  உடல் பரிசோதனை செய்யும் பணிகளையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெளிநாட்டில் இருந்து நமது மாவட்டத்திற்கு வருகை தந்த 2200 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

விசாரிக்க மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இவர்களின் உடல் நலம் குறித்து விசாரிக்க 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.  மேலும், முத்து மாவட்டம் செயலி மூலமும் இவர்கள் தாமாகவே உடல் நலம் குறித்து தகவல்களை பதிவேற்றம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு உடல் நலம் ஆரோக்யம் இல்லாத வகையில் மருத்துவர்கள் மூலம் இந்த நபர்களை கண்காணித்து பரிசோதனை செய்யப்படும்.   
நமது மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்காக 02.04.2020 அன்று வரை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நிவாரண நிதிக்கு ரூ.52 லட்சம் காசோலைகள் பெறப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட 5 நபர்களின் 2 நபர்கள் காயல்பட்டணம் நகராட்சி பகுதியை சேர்ந்தவர்கள். அப்பகுதியில் நகராட்சி பணியாளர்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  மேலும், சுகாதாரத்துறை மூலம் வீடு, வீடாக சென்று உடல் நலம் குறித்த விபரங்கள் சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. நமது மாவட்டத்தை சார்ந்த 9 நபர்களின் கொரோனா வைரஸ்  தொற்று உறுதி செய்வது தொடர்பான ரத்த மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 
மத்திய, மாநில அரசு விதித்துள்ள சுய ஊரடங்கு உத்தரவினை 21 நாட்கள் கடைபிடிக்க அனைத்து மாநிலங்களிலும் மற்றும் மாவட்டங்களிலும் கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.  மேலும், பொதுமக்கள் சமூக இடைவெளி பின்பற்றவும் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில்  நமது மாவட்டத்தில் சுய ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.  மேலும், பொதுமக்களுக்கு தடையின்றி அத்தியாவசிய பொருட்கள் அனைத்து வகையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இறைச்சி கடைகள் பொதுமக்கள் அதிகமாக கூட வாய்ப்பு உள்ளதால் பார்சல் மூலம் இறைச்சிகளை உடனடியாக வழங்கவும், சமூக இடைவெளியினை பின்பற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு தெரிவித்துள்ளபடி தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் அமைக்க விடுதி உள்ள கல்லூரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தேவைப்படும்பட்சத்தில் இந்த பணிகள் துவக்க நடவடிக்கை எடுக்கப்படும். 
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்று உள்ள நபர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனிமைப்படுத்தப்பட்ட வார்டு தயார் நிலையில் உள்ளது.  மேலும், மருத்துவமனை  வளாகத்தில் பிரி தனிமைப்படுத்தப்பட்ட வார்டு (PRE ISOLATION WARD) அமைக்கப்பட்டுள்ளது. அங்கு கொரோனா தொற்று அறிகுறிகள் உள்ள நபர்கள் பரிசோதனை செய்யப்படும். கொரோனா தொற்று நோய் உறுதி செய்தவுடன் அவர்களை கொரோனா வார்டுக்கு மாற்றும் செய்து தேவையான சிகிச்சைகள் அளிக்கப்படும்.  
 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளபடி, நமது மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நிவாரண தொகை ரூ.1000/- மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான ரேசன் பொருட்கள் வழங்கும் பணிகள் 02.04.2020 அன்று முதல் துவங்கியது. முதியோர்கள், தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வீடுகளுக்கு சென்று கொரோனா வைரஸ் நிவாரண தொகை ரூ.1000/- மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான ரேசன் பொருட்கள் வழங்க சுமார் 1500 தன்னார்வலர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். மேலும், அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo