Onetamil News Logo

தூத்துக்குடி மாவட்டத்தில் 69.42 சதவிகித வாக்குகள் பதிவு   

Onetamil News
 

தூத்துக்குடி மாவட்டத்தில் 69.42 சதவிகித வாக்குகள் பதிவு     


                           தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடந்தது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை முதலே விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவு இரவு வரை நீடித்தது. மாவட்டம் முழுவதும் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 11.61 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது.                                                                                                                        2021 - இந்த தேர்தலில் காலை 9 மணிக்கு 10.79 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது.
             11 மணிக்கு கடந்த தேர்தலில் 25.45 சதவீதமும், தற்போது 25.07 சதவீதமும், 1 மணிக்கு கடந்த தேர்தலில் 48.57 சதவீதமும், தற்போது 40.50 சதவீதமும், 3 மணிக்கு கடந்த தேர்தலில் 59.89 சதவீதமும், தற்போது 52.54 சதவீதமும், மாலை 5 மணிக்கு கடந்த தேர்தலில் 66.84 சதவீதமும், வாக்குகளும் பதிவாகி இருந்தன. 
                 தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.அதில், வாக்கு சதவீதம் விளாத்திகுளம் 76.43 தூத்துக்குடி 65.4 ;திருச்செந்தூர் 69.96 ஸ்ரீவைகுண்டம் 72.34 ,ஓட்டப்பிடாரம் 69.82, கோவில்பட்டி 67.42 மொத்தம் தூத்துக்குடி மாவட்டத்தில் 69.42 சதவிகித வாக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த தேர்தலை ஒப்பிடும் போது, தற்போது வாக்குப்பதிவு சதவீதம் வெகுவாக குறைந்து உள்ளது. கொரோனா தொற்று காரணமாக இந்த வாக்குப்பதிவு சதவீதம் குறைந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo