Onetamil News Logo

தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மீளவிட்டான்  காட்டுப்பகுதியல் ஒருவர் கொலை - 4 பேர் கைது   ;போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து சுப்ரமணியன் -க்கு பாராட்டு

Onetamil News
 

தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மீளவிட்டான்  காட்டுப்பகுதியல் ஒருவர் கொலை - 4 பேர் கைது   ;போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து சுப்ரமணியன் -க்கு பாராட்டு


தூத்துக்குடி2020 அக்டோபர் 22 ;தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மீளவிட்டான்  காட்டுப்பகுதியல் ஒருவர் கொலை -  4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மீளவிட்டான் காட்டுப் பகுதியில், தூத்துக்குடி மில்லர்புரம் கணேசன் நகர் N.G.O காலனியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் கதிரேசன் (31) என்பவர் நேற்று முன்தினம் (20.10.2020) காலை மர்ம நபர்களால் அரிவாளால் தாக்கி கொலை செய்யப்பட்டு  கிடந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சம்பவ இடத்தை பார்வையிட்டு, தூத்துக்குடி ஊரக உட்கோட்ட  துணை காவல் கண்காணிப்பாளர் திரு.  பொன்னரசு மேற்பார்வையில், சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் திரு. முத்துசுப்பிரமணியன் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளியை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டார்.  
மேற்படி தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டதில் முத்தையாபுரம் தங்கம்மாள்புரத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் சுந்தர்ராஜ் (28) என்பவருக்கும் இறந்த கதிரேசனுக்கும் இடையே இரண்டு மாதத்திற்கு முன்பு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அந்த முன் விரோதத்தின் காரணமாக சுந்தராஜீம், அவரது கூட்டாளிகளும் சேர்ந்து கொலை செய்யத்திட்டமிட்டு, கொலையான கதிரேசனை மது அருந்த சம்பவ இடமான மீளவிட்டான் காட்டுப் பகுதிக்கு வரவழைக்கபட்டு அரிவாளால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து கதிரேசன் சகோதரரர் முருகேசன் அளித்த புகாரின் பேரில் சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது சம்மந்தமாக சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் முத்துசுப்பிரமணியன் தலைமையிலான தனிப்படையினர் உதவி ஆய்வளார்கள் சங்கர்,  இராஜபிரபு, பாலன், தனிப்பிரிவு உதவி ஆய்வளார் நம்பிராஜன், தனிப்பிரிவு காவலர் கலைவாணன் மற்றும் போலீசார் ஆகியோர் நேற்று (21.10.2020) கொலை வழக்கு எதிரிகளான தூத்துக்குடி முத்தையாபுரம் தங்கம்மாள்புரத்தைச் சேர்ந்த  முத்துலிங்கம் மகன் முத்துக்குமார் (19), தூத்துக்குடி தாமோதர நகரைச் சேர்ந்த அருள்ராஜ் மகன் நவீன் (20), முத்தையாபுரம் தங்கம்மாள்புரத்தைச் சேர்ந்த  பாலகிருஷ்ணன் மகன் சுந்தர்ராஜ் (28) மற்றும் தூத்துக்குடி தாமோதர நகரைச் சேர்ந்த அற்புதராஜ் மகன் செல்வம் என்ற ஆரோக்கியசெல்வம் (20)  ஆகியோரை தனிப்படையினர் கைது செய்து, அவர்களிடமிருந்து கொலை குற்றத்திற்கு பயன்படுத்திய மூன்று அரிவாள்கள், ஒரு கத்தி மற்றும் இரண்டு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.  மேற்படி கொலை வழக்கு எதிரிகளை விரைந்து கைது செய்த தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo