தூத்துக்குடி ஹோலி கிராஸ் மழலையர் பள்ளி ஆண்டு விழா,போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வேல்ராஜ் பங்கேற்பு
தூத்துக்குடி 2023 மார்ச் 18 ;தூத்துக்குடி ஹோலிகிராஸ் மழலையர் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது, விழாவை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது,
இதில் சிறப்பு விருந்தினராக போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வேல்ராஜ், ஜெனட் ஜெயம், மீவர் கிளயர் எக்ஸ்போர்ட்ஸ் மற்றும் தாளாளர் செலின்,பள்ளி முதல்வர் ரொசாரியோ,பள்ளி ஆசிரியைகள், அனைத்து மாணவ மாணவிகள் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர், கடந்த சில ஆண்டுகளாக கொரோனா உள்ளிட்ட காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்த ஆண்டு விழா இந்த ஆண்டு நடைபெற்றதால் அனைவரும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.