தூத்துக்குடி செய்தியாளர்கள் இல்ல விழா அமைச்சர் மேயர் முன்னாள் அமைச்சர் பஞ். தலைவர் உள்ளிட்ட பலர் வாழ்த்து.
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஜெஜெநகர் பாலகிருஷ்ணன் மாவட்ட செய்தியாளர் இலங்கைரதி புதல்வன் சதீஷ்குமார் ஆ.சண்முகபுரம் காசிராஜன் மேரி புதல்வி ஆர்த்தி புவனேஸ்வரி ஆகியோரது திருமணம் ஆ.சண்முகபுரம் பத்திரகாளியம்மன் கோவிலில் வைத்து நடைபெற்றது.
பின்னர் ஜெஜெநகர் இல்லத்தில் நடைபெற்ற திருமண வரவேற்பு விழாவிற்கு வருகை தந்தவர்களை செய்தியாளர்கள் சண்முகசுந்தரம், மாரிமுத்து, ச.ரேகா ஆகியோர் வரவேற்றனர்.
வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்றதலைவரும் நகர கூட்டுறவு சங்க தலைவருமான சரவணக்குமார், தூத்துக்குடி மாவட்ட மொத்த கூட்டுறவு பண்டகசாலை தலைவர் எட்வின்பாண்டியன் தூத்துக்குடி மாநகர திமுக துணைச்செயலாளரும் மாநகராட்சி பணிக்குழு தலைவருமான கீதாமுருகேசன், அதிமுக பகுதி செயலாளர் ஜெய்கணேஷ், அதிமுக வட்டச்செயலாளர் ஜெயக்குமார், காரப்பேட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் செயலாளர் செல்வராஜ், வடதிசை இந்துநாடார் மகமை சங்க முன்னாள் துணைச்செயலாளர் செல்வக்குமார் தூத்துக்குடி வழக்கறிஞர் சங்க செயற்குழு உறுப்பினர் மரியகீதா மேலசண்முகபுரம் பத்திரகாளியம்மன் கோவில் பொருளாளர் முருகேசன் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, அதிமுக போக்குவரத்து தொழிற்சங்க முன்னாள் மண்டல இணைச்செயலாளர் சங்கர் தகவல் தொழில்நுட்ப அணி கௌதம் பாண்டியன், போல்பேட்டை பகுதி திமுக பிரதிநிதி பிரபாகர் திமுக பிரமுகர்கள் கருணா அல்பட் காமராஜர் காய்கனி மார்க்கெட் துணை மேலாளர் ரவி, உள்பட பல்வேறு செய்திதுறையை சார்ந்தவர்களும் பல அமைப்பை சேர்ந்தவர்களும் மணமக்களை வாழ்த்தினார்கள்.