Onetamil News Logo

அடுத்து எங்க ஆட்சி தான் ;கமலஹாசன் நற்பணி மன்ற தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் சேகர் பேட்டி 

Onetamil News
 

அடுத்து எங்க ஆட்சி தான் ;கமலஹாசன் நற்பணி மன்ற தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் சேகர் பேட்டி   


                         
 தூத்துக்குடி பிப்ரவரி 4 ;  தூத்துக்குடியில் கமலஹாசன் நற்பணி மன்ற செயல்வீரர்கள் கூட்டம் இன்று தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.   
தூத்துக்குடியில் கமலஹாசன் நற்பணி மன்ற செயல்வீரர்கள் கூட்டம் பாளை ரோட்டில் உள்ள  தனியார் திருமண மண்டபத்தில் இன்று  நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆலோசகர் ஏ.டி.பிராங்கிளின் தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர் ஆர்.சேகர் முன்னிலை வகித்துப்  செய்தியாளர்களிடம் கூறியதாவது ..வருகின்ற  பிப்ரவரி 21 ம் தேதி நாளை நமதே அரசியல் பயணத்தில் இராமநாதபுரத்தில் தொண்டர்களை சந்திக்கிறார். அன்று புதிய அரசியல் கட்சி துவக்க விழா நடைபெறுகிறது.அதில் கலந்து கொள்ள  60 வேன் ,60 கார்  உட்பட மொத்தம் 120 வாகனங்களில் செல்ல இருக்கிறோம்,தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து 2000 பேர் கலந்த கொள்ள வேண்டும்,அடுத்து எங்க ஆட்சி தான்  என்று பேசினார். இதில் மாவட்ட மகளிர் செயலாளர் திவ்ய பாரதி, பொறுப்பாளர் சிவக்குமார்,செயலாளர் மாரியப்பன்,பொருளாளர் மயில்ராஜ்,இணை செயலாளர் செல்வராஜ்,துணை செயலாளர் பிரிட்டோ ,மாநகர நிர்வாகிகள் சந்திரசேகர்,சுந்தர்,மெல்வின்  வில்வராயார், ராஜ்குமார், வின்சென்ட்,ஜோசப் ,  மாவட்ட ,ஒன்றிய,நகர,முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo