62வயதில் 62 வட்டம் அடித்து, 25கிலோ மீட்டர் ஓடி விழிப்புணர்வு ஏற்படுத்திய தூத்துக்குடி கராத்தே மாஸ்டர்!
தூத்துக்குடி ஆசிரியர் காலனி பகுதியை சேந்தவர் இம்மானுவேல் (62). இவர் ஆசிரியர் காலனியில் ஈசி பிட்னெஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி வைத்து கராத்தே, தடகளம், சிலம்பம் போன்ற விளையாட்டுகள் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.
இந்நிலையில், இன்று இவரின் 62வது பிறந்த நாளை முன்னிட்டு 400மீட்டர் சுற்றளவு கொண்ட தூத்துக்குடி தருவை மைதானத்தில் 62 ரவுண்ட் 25கிலோமீட்டர் ஓடி விழிப்புணர்வு மேற்கொண்டார்.
இதுகுறித்து மாஸ்டர் இம்மானுவேல் கூறுகையில், மாணவர்கள் நோய்கள் இல்லாமல், மருந்து இல்லாமல் வாழ்வதற்கு தினமும் சத்தான சிறுதானிய உணவு மற்றும் நடைப்பயிற்சி தேவை ஓட்டப் பயிற்சி செய்து உடல் ஆரோக்கியத்தையும், அவசியத்தையும் வலியுறுத்தி ஓட்டம் மேற்கொண்டதாக கூறினார்.
மேலும், இந்த ஓட்டத்தில் ஈசி பிட்னஸ் ஸ்போட்ஸ் அகாடமி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். பின்னர், மாணவ மாணவிகளுக்கு பரிசுக் கோப்பைவழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி முன்னாள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் அலுவலர் பேட்ரிக், தூத்துக்குடி பாலசரஸ்வதி சிட் பண்ட் நிர்வாக இயக்குனரும், மாநில பீச் வாலிபால் கன்வினர் பாலகிருஷ்ணன், தூய சவேரியார் மேல்நிலைப்பள்ளி உதவித் தலைமையாசிரியர் ஹென்றி ஸ்டிபன், தூத்துக்குடி மாவட்ட பாரதிய ஜனதா துணைத் தலைவர் வழக்கறிஞர். எஸ்பி வாரியார் மற்றும் பெற்றோர்கள், மைதானத்தில் உடற்பயிற்சி மேற்கொண்டோர் என பலர் வாழ்த்து தெரிவித்தனர்.