தூத்துக்குடி மாதா நகர் எம் எஸ் டி கபாடி குழு ;10ம்வகுப்பு ,12ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா
தூத்துக்குடி மாதா நகர் எம் எஸ் டி கபாடி குழு நடத்தும் 7ம் ஆண்டு ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாபெரும் சூரிய ஒளி கபாடி போட்டியை மாப்பிள்ளையூரணி ஊராட்சி ஒன்றிய தலைவரும் கிழக்கு ஒன்றிய செயலாளருமான ஆர் சரவணக்குமார் தலைமையில் மாவட்ட சுற்றுச்சூழல் அணி பி ரவி என்ற பொன் பாண்டி முன்னிலையில் உமரிசங்கர்,மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம் ஆகியோர் தொடங்கிவைத்தனர். தூத்துக்குடி மாவட்டம் மாதா நகர் அருள்மிகு ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாதா நகர் எம் எஸ் டி கபடி குழு நடத்தும் 7ம் ஆண்டு ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாபெரும் சூரிய ஒளி கபடி போட்டி விழாவிற்கு மாப்பிளையூரணி ஊராட்சித் தலைவரும்,கிழக்கு ஒன்றிய செயலாளருமான ஆர்.சரவணக்குமார் தலைமை தாங்கினார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி பி ரவி என்ற பொன் பாண்டி விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
மாநில வர்த்தக பிரிவு இணைச்செயலாளர் எஸ் ஆர் எஸ் உமரிசங்கர்,தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம் ஆகியோர் இறுதிச்சுற்று கபாடி போட்டியை தொடங்கிவைத்தனர்.10ம்வகுப்பு ,12ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு விருதுகளை வழங்கினார்கள். தூத்துக்குடி தெற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் மாவட்ட கவுன்சிலர் வி பி செல்வகுமார்,ஒன்றிய கவுன்சிலர் அந்தோணி தனுஷ் பாலன்,ஊராட்சி உறுப்பினர்கள் பாரதிராஜா,தங்கமுத்து உட்பட பலர் பங்கேற்றனர்.