மாநில அளவிலான இன்களைன் பெஞ்ச் பிரஸ் போட்டியில் தூத்துக்குடி மாநகராட்சி 50 வது வார்டு மாமன்ற உறுப்பினர் S. சரவணக்குமார் தனது பிரிவில் முதல் பரிசு தங்கம் வென்றார்; பாராட்டும் பொதுமக்கள்
தூத்துக்குடி 2023 ஜூலை 11 ;இன்களைன் பெஞ்ச் பிரஸ் போட்டியில் தூத்துக்குடி மாநகராட்சி 50 வது வார்டு மாமன்ற உறுப்பினர் S. சரவணகுமார் தனது பிரிவில் முதல் பரிசு தங்கம் வென்றார். சென்னையில் நந்தனம் பகுதியில் உள்ள சென்னை மாநகராட்சி பள்ளியில் வைத்து நடைபெற்ற மாநில அளவிலான ஸ்ட்ரெந்த் லிப்டிங் போட்டி மாநில ஸ்ரேன்த் லிப்டிங் சங்கம் சார்பில் பல பிரிவுகளில் நடைபெற்றது. இதில் இன்க்லைன் பெஞ்ச் பிரஸ், ஹக் ஸ்குவாட், பைசப்ஸ் கரல் இடம்பெற்றிருந்தது, அதில் மாநில அளவிலான இன்களைன் பெஞ்ச் பிரஸ் போட்டியில் கலந்துகொண்ட தூத்துக்குடி மாநகராட்சி 50 வது வார்டு மாமன்ற உறுப்பினர் S. சரவணகுமார் தனது பிரிவில் முதல் பரிசு தங்கம் வென்றார்.இவரை பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து 22 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அனைவரும் முறையே அவரவர் எடை பிரிவுகளில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை வென்றனர். மேலும் நமது தூத்துக்குடி மாவட்ட அணி மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை புரிந்தனர்.அதில் தூத்துக்குடியில் இருந்து கலந்து கொண்ட ஜிம்:-
1*MMM ஜிம்
2*இந்தியன் பவர் ஜிம்
3*சிலுவை ஜிம் (தருவைகுளம் )
இருபதுக்கும் மேற்பட்ட மாவட்டங்கள் கலந்து கொண்ட மாநில அளவிலான ஸ்டிரண்த் லிப்டிங் போட்டி