Onetamil News Logo

தூத்துக்குடி மீன் பிடித்துறைமுகத்திற்குள் முன் பகை காரணமாக இளைஞர் வெட்டிக்கொலை - பரபரப்பு 

Onetamil News
 

தூத்துக்குடி மீன் பிடித்துறைமுகத்திற்குள் முன் பகை காரணமாக இளைஞர் வெட்டிக்கொலை - பரபரப்பு   


தூத்துக்குடி 2020 செப் 14 ;தூத்துக்குடி மீன் பிடித்துறைமுகத்திற்குள் முன் பகை காரணமாக இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். 
தூத்துக்குடி முத்தையாபுரம், பாரதிநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப் இவரின் மகன் கபில்தேவ்(27), இவருக்கும் அவரது நண்பர்களுக்கும் இடையே முன்பகை இருந்துள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி மீன் பிடித்துறைமுகத்திற்குள் வைத்து மதுகுடிக்கும் பொழுது அவர்களுக்குள் தகராறு எழுந்துள்ளது.அப்பொழுது அவரது நண்பர்கள் இவரை   சரமாரியாக வெட்டியுள்ளனர்.  இதில் அவர் சம்பவ இடத்திலேயே கபில்தேவ்  உயிரிழந்துள்ளார். 
இதுகுறித்து தகவலறிந்த தென்பாகம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  அனுப்பி வைத்தனர்.  கொலைக்குறித்து முத்தையாபுரம், சுந்தரம் நகரைச் சேர்ந்த சாம்சன் (21) என்ற நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரின் தகவலின் படி இச்சம்பவத்தில் தொடர்புடைய பூபாலராயர்புரத்தை சேர்ந்த  இஸ்ரவேல்ராஜன் மற்றும் பலரை போலீசார் தேடி வருகின்றனர்.இதுகுறித்து  மாநகர துணை காவல் கண்காணிப்பாளர் கணேஷ் நேரில் விசாரணை நடத்தினார். மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமார் சம்பவ இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo