Onetamil News Logo

தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் நேர்மையாக செயல்பட வேண்டும். முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் பேச்சு

Onetamil News
 

தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் நேர்மையாக செயல்பட வேண்டும். முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் பேச்சு


தூத்துக்குடி 2021 செப் 12 :தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் நேர்மையாக செயல்பட வேண்டும். என்று  ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் பேசினார்.
      தூத்துக்குடி சிஎஸ்ஐ தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் பேராயர் ராபர்ட் கால்டுவெல் சபை மன்ற தேர்தல் வேட்பாளர்கள் அறிமுகம் குறித்த ஆலோசனை கூட்டத்திற்கு எஸ்டிகே ராஜன் தலைமை வகித்தார்.
      இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கால்டுவெல் பள்ளி தாளாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் பேசுகையில் திருமண்டலம் நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது. தற்போது உள்ள நிர்வாகம் பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்துள்ளனர். குறிப்பாக கல்லூரிகள் மேம்படுத்துதல் ஆலயம் இல்லாத பகுதிகளில் ஆலயம் அமைத்தல் தூத்துக்குடியில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நல்ல நிர்வாகத்தில் கீழ் 700 பேர் படிக்கின்றனர். நான் பொறுப்பில் இருக்கின்ற பள்ளிக்கு கூட சில பணிகளை செய்து தர சொல்லி போராயரிடம் கேட்;;ட போது அது நடக்கவில்லை. காரணம் நல்ல பணிகளாக இருக்க வேண்டும் தவறான பணிகளுக்கு யாரும் செல்ல கூடாது என்ற கண்டிப்புடன் கடமை உணர்வோடு செயல்படக்கூடியவர் தான் நம்ம போராயர் சபை மக்களுக்காகவே இந்த அணி செய்த பணிகள் ஏராளம் அதை பட்டியலிட்டால் நீண்டு கொண்டே செல்லும் மற்றவர்களை நான் குறைசொல்ல விரும்பவில்லை அவர்கள் செய்த தவறை அவர்கள் மணம் வருந்தி திருந்தி கொள்ள வேண்டும். ஏனென்றால் கர்த்தருக்கு பயப்பட்டு செய்ய கூடிய காரியங்கள் அதில் தவறு செய்யாமல் பணியாற்ற வேண்டும். இந்த அணியில் இருக்கின்ற அனைவருமே நேர்மையானவர்கள் ஓட்டு மொத்தமாக நாம் வெற்றி பெற வேண்டும்.
     சபை மன்ற செயலர் வேட்பாளர் ரவிசிங் ராபர்ட் பெஞ்சமின், திருமண்டல நிர்வாக குழு வேட்பாளர்கள் பொதுப்பிரிவு ஜெ.எஸ்.தேவராஜன், பி.சுதன்கிலர், பெண்கள் பிரிவு பி.தென்றல் பெஞ்சமின், வாலிபர் பிரிவு எல்.இம்மானுவேல், ஆகியோரை ஆதரித்து முன்னாள் எம்.பி ஏடிகே. ஜெயசீலன், சாயர்புரம் ராஜேஷ் ரவிசங்கர், உள்ளிட்ட திருமண்டல சபை குருவானவர்கள் பேசினார்கள்.
     திருமண்டலத்தை சேர்ந்த உறுப்பினர்கள் சி.த.சு.ஞான்ராஜ், ஞானகுமார், ஜெபர்சன், ஆல்வின், வாட்சன், ஞானஸ்டீபன், ஷாம், மோகன், டேனியல், இஸ்ரேல், ஐயாத்துரை, இம்மானுவேல், பொன்ராஜ், ஜான்சன், செல்லப்பா, காட்வின், நவசிங்காசி, அருண்ஜெபக்குமார், மோசஸ், ரூபன், கிருபாகரன், தனசேகர், தனசிங், ஸ்டீபன், அலெக்ஸாண்டர், ரவிராஜன், பர்ணாஸ், ஜாய்சன், பிரபாகர், அலன், வில்லியம், அலெக்ஸ், கோயில்பிச்சை, சந்துரு, ரூபன்சிங், ஜானியேல், போல்பேட்டை சேகரம் ஐசக், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo