Onetamil News Logo

இளநீர் பறித்ததில் 2 பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டு தூத்துக்குடி கல்லூரி மாணவர் வெட்டி கொலை  ;தலையைத் தேடியும், கொலையாளிகளைத் தேடியும் அலையும் போலீஸ் 

Onetamil News
 

இளநீர் பறித்ததில் 2 பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டு தூத்துக்குடி கல்லூரி மாணவர் வெட்டி கொலை  ;தலையைத் தேடியும், கொலையாளிகளைத் தேடியும் அலையும் போலீஸ் 


தூத்துக்குடி 2020 மே 30 ;தூத்துக்குடி மாவட்டம்,ஏரல் தாலுகாவுக்கு உட்பட்ட,கிழ கீரனுர் மற்றும் தலைவன் வடலி கிராமத்தின் 2 பிரிவு  இளைஞர்களிடையே ஏற்பட்ட மோதலில் தூத்துக்குடி கல்லூரி மாணவர் வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கிறார். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
தூத்துக்குடி அருகே உள்ள ஆத்தூரை அடுத்த தலைவன் வடலி இளைஞர் ஒருவர் கீழ கீரனுர் ஒருவருக்கு சொந்தமான தோட்டத்தில் யாருக்கும் தெரியாமல் தென்னை மரத்தில் ஏறி இளநீர் பறித்துள்ளார். இதைப்பார்த்த அவ்வூர் இளைஞர்கள் தென்னை மரத்தில் கட்டி வைத்துள்ளனர். அதன் பின்னர் மன்னிப்பு கேட்டுவிட்டு சென்றுவிடு என்று கூறியுள்ளனர்.
அப்பொழுது சத்யமூர்த்தி என்ற இளைஞர் மன்னிப்பு கேட்கமுடியாது.என்று இளநீர் திருடிய இளைஞர்-யை அழைத்து கொண்டும் சாதியை சொல்லி திட்டியும் சென்றதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.இந்த நிலையில் சத்யமூர்த்தி கீரனுர் இளைஞர்களை அசிங்கமாக பேசியதால் அவர்கள்    சத்யமூர்த்தியை கொலை செய்துவிட்டு தலையை எங்கு கொண்டு சென்றார்கள் என்று தெரியவில்லை. 
இதில் கொலைசெய்யப்பட்டவர் பரமசிவம் மகன் சத்தியமூர்த்தி (23),இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு கல்லூரியில் பிகாம் 3 ம் ஆண்டு படிக்கும்  மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.. கொலை செய்யப்பட்டவரின் தலையை காணவில்லை ,போலீசார் தேடி வருகிறார்கள்.ஆத்தூர் போலீஸார் இதுகுறித்து வழக்குபதிவு செய்தும், மேலும் பிரச்னை ஏற்படாமல் இருப்பதற்கு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo