Onetamil News Logo

‘காவலர் வீர வணக்க நாள்”;  தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  அருண் பாலகோபாலன், தலைமையில் துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை

Onetamil News
 

‘காவலர் வீர வணக்க நாள்”;  தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  அருண் பாலகோபாலன்,  தலைமையில் துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை


                     

தூத்துக்குடி 2019 அக்டோபர் 21 ; ‘காவலர் வீர வணக்க நாள்”;  தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  அருண் பாலகோபாலன்,  அவர்கள் தலைமையில் துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. 
    1959ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி லடாக் பகுதியில் ‘ஹாட ஸ்பிரிங்ஸ்” என்ற இடத்தில் சீன இராணுவத்தினர் ஒளிந்திருந்து மேற்கொண்ட திடீர் தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்பு படை (ஊசுPகு) காவலர்கள் உயிரிழந்தனர். கடல் மட்டத்திலிருந்து பதினாராயிரம் அடி உயரத்தில், அன்று வீர மரணமடைந்த காவலர்களின் தியாகத்தை, கடல் அலைகள் கண்ணுக்குத் தெரியும்; இவ்விடத்தில் இருந்து நாம் இன்று நினைவு கூர்கிறோம்.
கடற்கரையானாலும், பனிமலைச் சிகரமானாலும், காவலர் பணி, இடர் நிறைந்தது. உனது வருங்காலத்திற்கு எனது தற்காலத்தை ஈந்தேன்;. நாளை உன் விடியலுக்கு இன்று நான் மடியத்தயார் என்று கூறி இவ்வாண்டு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நம்மைவிட்டு பிரிந்த காவல் குடும்பத்தினரின் எண்ணிக்கை 292 மடிந்த இவர்கள் விட்டுச் சென்ற பணிகளை செய்து முடிப்போம் என்று உறுதிபூண்டு, அவர்களின் வீரத்தியாகம் வீண்போகாது என்று இந்த காவலர் வீரவணக்க நாளில் உறுதி மொழி ஏற்கப்பட்டது. 
கடந்த 01.09.2018 முதல் 31.08.2019 வரை வீர மரணமடைந்த காவல்துறையினர் ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த காவலர் கே. ராஜேந்திர பிரசாத் மற்றும் ஒருவர் மற்றும் தலைமை காவலர் குண்டாங் சிக்ஸ் மற்றும் இருவர், பீகாரைச் சேர்ந்த எஸ.ஐ. அசிஷ்குமார் மற்றும் 6 பேர், சத்தீஷ்கரைச் சேர்ந்த எஸ்.ஐ ருத்ரபிரதாப்சிங் மற்றும் 13 பேர், ஹரியானாவைச் சேர்ந்த எஸ்.ஐ திரு. ரன்பீர் சிங் மற்றும் இருவர், ஹிமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் சர்தாரி லால், ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த டி.எஸ்.பி திரு.அமன்குமார் தாக்கர் மற்றும் 23 பேர், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஏ.எஸ.;ஐ திரு. கோவர்த்தன் பவான் மற்றும் 4 பேர், கர்நாடகாவைச் சேர்ந்த எஸ.ஐ. வீரப்ப டாட்டப்பா லட்டி மற்றும் 11 பேர், மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த தலைமை காவலர் திரு. உமேஷ்பாபு மற்றும் ஒருவர் மஹாராஷ்ட்ராவைச் சேர்ந்த எஸ்.ஐ. திரு. சத்திரபதி கிஸான் சிடே மற்றும் 19 பேர், மணிப்பூரைச் சேர்ந்த ஹவில்தார் திரு. சோமி மற்றும் ஒருவர், ஒடிஷாவைச் சேர்ந்த ஹவில்தார் திரு. சுஜித்குமார் மின்ஸ் மற்றும் ஒருவர், ராஜஸ்தானைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் திரு. முகேஷ்குமார் கன்னுங்கோ மற்றும் 9 பேர், சிக்கிமைச் சேர்ந்த காவலர் மிங்குரே ட்ஷெரிங் லெப்சா, திரிபுராவைச் சேர்ந்த  பழஷ்ஜோதி தவான், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் சுபோத்குமார் சிங், உத்தரகாண்டைச் சேர்ந்த காவலர் யோகராஜ், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த எஸ்.ஐ சுபிர்குமார் நாத் மற்றும் 6 பேர், டெல்லியைச் சேர்ந்த ஏ.எஸ்.ஐ ஒமர் சிங் மற்றும் 9 பேர், அஸ்ஸாம் ரைபிள் பிரிவைச் சேர்ந்த நாயப் சுபேதார். தினா நாத் மற்றும் 2 பேர், எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த டி.சி. திரு. மோகன்ராம் மூண்ட் மற்றும் 40 பேர், மத்திய தொழில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த எஸ்.ஐ திரு. மஹாவீர் பிரசாத் மற்றும் 5 பேர், மத்திய பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஏ.சி. குலாம் ஜீலனிஹன் மற்றும் 66 பேர், இந்தோ திபெத்தியன் எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த எஸ்.ஐ  பிரித்வி சிங் மற்றும் 22 பேர், எஸ்;.எஸ்.பியைச் சேர்ந்த தலைமை காவலர் சிக்கந்தர் யாதவ் மற்றும் 4 பேர், என்.டி.ஆர்.எப் பிரிவைச் சேர்ந்த டி.சி.  திக் விஜய்சிங் மற்றும் 3 பேர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படைச் சேர்ந்த ஏ.எஸ்.ஐ பாஸ்கர் சந்திர பத்ரா மற்றும் 10 பேர்  ஆகிய மேற்படி 292 காவல்துறையினர் ‘உனது வருங்காலத்தில் எனது தற்காலத்தை ஈந்தேன்” என்று கூறி வீர மரணம் அடைந்துள்ளார்கள். 
இந்த காவலர் வீர வணக்க நாளில் அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் அவர்களுக்கு அரசு மரியாதையுடன் துப்பாக்கி குண்டு முழங்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன், இ.கா.ப அவர்கள் தலைமையில் அஞ்சலி செலுத்தி உறுதிமொழி எடுக்கப்பட்டது. 
இந்த வீர வணக்க நாள் நிகழ்ச்சியில் தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ், திருச்செந்தூர் டி.எஸ்.பி பாரத், கோவில்பட்டி டி.எஸ்.பி ஜெபராஜ், சாத்தான்குளம் டி.எஸ்.பி  பால்துரை, மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி  சுரேஷ் பெலிக்ஸ்,   பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர்  ராகவேந்திரா கே. ரவி, மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளர் பாலமுருகன்,  காவல் ஆய்வாளர்கள் கிருஷ்ணகுமார், ஆயுதப்படை ஆய்வாளர்  மகேஷ் பத்மநாபன், ஜெயப்பிரகாஷ், அருள், வனிதா, போக்குவரத்துப்பிரிவு காவல் ஆய்வாளர்  சிசல், உதவி ஆய்வாளர்கள் ராஜாமணி, செல்வராஜ்,சுந்தரம், ரவிக்குமார், ஊர்க்காவல் பெருமாள், போக்குவரத்து உதவி ஆய்வாளர் வெங்கடேஷ், சிவக்குமார், ஊர்காவல் பெருமாள், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி சத்திய நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo