Onetamil News Logo

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் உலக விண்வெளி வார விழாவையொட்டி நடைபெற்ற  விண்வெளி கண்காட்சி ;இஸ்ரோ முன்னாள் இயக்குநர் பத்மஸ்ரீ ஆர்.எம்.வாசகம் பங்கேற்பு 

Onetamil News
 

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் உலக விண்வெளி வார விழாவையொட்டி நடைபெற்ற  விண்வெளி கண்காட்சி ;இஸ்ரோ முன்னாள் இயக்குநர் பத்மஸ்ரீ ஆர்.எம்.வாசகம் பங்கேற்பு 


தூத்துக்குடி  2019 அக்டோபர் 9 ;தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் உலக விண்வெளி வார விழாவையொட்டி நடைபெற்ற  விண்வெளி கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,திறந்து வைத்து பார்வையிட்டார். 
திருநெல்வேலி மகேந்திரகிரி இஸ்ரோ உந்தும வளாகம் மற்றும் தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி இணைந்து உலக விண்வெளி வார விழாவையொட்டி விண்வெளி கண்காட்சி தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி வளாகத்தில் இன்று (09.10.2019) நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,  கலந்துகொண்டு விண்வெளி கண்காட்சியினை குத்துவிளக்கு ஏற்றிவைத்து திறந்து வைத்து பார்வையிட்டார். விழாவில் இஸ்ரோ முன்னாள் இயக்குநர் பத்மஸ்ரீ ஆர்.எம்.வாசகம்  சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது: ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அளவில் அக்டோபர் 4 முதல் 10ம் தேதி வரை உலக விண்வெளி வார விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு தலைப்பில் இந்த வார விழாவையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே பல்வேறு விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டு அவர்களிடையே விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு “நிலா விண்மீன்களில் நுழைவாயில்” என்ற தலைப்பில் கொண்டாடப்படுகிறது. 1969ம் ஆண்டு இஸ்ரோ நிறுவனம் துவக்கப்பட்டது. 1975ம் ஆண்டு இந்தியா ஆரியபட்டா என்ற விண்கலம் ஏவப்பட்டது. வளர்ந்த நாடான அமெரிக்கா, இரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்துதான் விண்கலம் ஏவும் நிலை இருந்து வந்தது. வளர்ந்து வரும் இந்திய நாடு பொதுமக்களின் தேவைக்கேற்ப பல்வேறு விண்கலம் ஏவப்பட்டு வருகிறது. குறிப்பாக தொலைத்தொடர்புக்காகவும், விவசாயத்திற்காகவும், வானிலை நிலைப்பாட்டையும் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக விண்கலம் ஏவப்பட்டு வருகிறது. இன்று தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி வளாகத்தில் உலக விண்வெளி வார விழாவையொட்டி விண்வெளி கண்காட்சி திறந்து வைக்கப்பட்டது. இந்த கண்காட்சி 9, 10, 11 ஆகிய 3 நாட்கள் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள். பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படுகிறது. இந்த கண்காட்சியில் விண்கலத்தில் பயன்படுத்தப்படும் கருவிகள், இயந்திரங்கள், PSLV, GSLV   உள்ளிட்டவை குறித்து விளக்கமும் அளிக்கப்படுகிறது. இன்றைய செய்தித்தாளில் 3 விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசுக்காக அறிவித்துள்ளார்கள். இதில் ஒரு விஞ்ஞானி சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களையும் தாண்டி ஆராய்ச்சி செய்துள்ளார்கள். இஸ்ரோ தற்போது சந்திராயன் 2 விண்கலன் ஏவி 98 சதவீதம் வெற்றி கண்டுள்ளார்கள். இது இந்திய நாட்டிற்கே மிகப்பெரிய பெருமை சேர்த்துள்ளது. தசராவையொட்டி இக்கண்காட்சியும், புத்தக கண்காட்சியும் நடத்தப்படுகிறது. பொதுமக்கள், மாணவ, மாணவிகள் இவைகளை கண்டுகளித்து பயன்பெற வேண்டும். டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் கனவு காணுங்கள் என்று இளைஞர்களிடையே தெரிவித்தார்கள். எனவே பள்ளி மாணவ, மாணவியர்கள் சிறுவயதில் இருந்தே தங்களது லட்சியத்தை அடைய விடாமுயற்சி மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாணவ, மாணவியரிடையே ஒவ்வொரு திறமை இருக்கும். அதனை வெளிக்கொண்டு வந்து சமுதாயத்திற்கு பயனுள்ளதாக மாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசினார். 
வுpழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற ISROமுன்னாள் இயக்குநர் பத்மஸ்ரீ ஆர்.எம்.வாசகம் பேசியதாவது:
விண்வெளித் தொழில் நுட்பத்தில் இந்தியாவின் வியத்தகு முன்னேற்றத்திற்கு வித்திட்டு வளர்த்த பெருந்தகை விக்ரம் சாராபாய் அவர்கள் ஒரு சிறந்த இயற்பியல் வல்லுநர். அதிலும் அண்டக்கதிர் (Cosmic Rays) விஞ்ஞானத்தில் சிறப்பறிவு பெற்றவர். 1962ல் ஜவஹர்லால் நேரு, இந்திய தேசிய விண்வெளி ஆராய்ச்சிக் குழுவை நிறுவி அதன் தலைவராக முனைவர் விக்ரம் சாராபாய் அவர்களை நியமித்தார். செயற்கை துணைக் கோள்களின் வழியாக கல்வியைத் தொலைக்காட்சி சாதனங்களின் மூலம்  பரப்பிக் கிராமங்களில் பாமர மக்களும் பயில வழிவகை செய்தார். இந்திய அரசு 1966ல் பத்ம பூஷன் விருதை அளித்தது. மேலும், 1969ல் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் நிறுவப்பட்டு அதன் தலைவராக விக்ரம் சாராபாய் நியமிக்கப்பட்டார்.  உலக நாடுகளே திரும்பி பார்க்கும் வகையில் இந்தியா தற்போது சந்திராயன் 2 ஏவியுள்ளார்கள்.   இந்தியா 2022ம் ஆண்டில் 3 விஞ்ஞானிகளை விண்வெளி ஆராய்ச்சிக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. உலக அளவில் 2030ல் 1050 விண்வெளி திட்டங்கள் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு 450 மில்லியன் டாலர் செலவாகும், இதில் 30 மில்லியன் டாலர் செலவுவரை இந்தியாவில் மேற்கொள்ளவுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்ல் குலசேகரன்பட்டினத்தில் ஏவுதளம் அமைப்பதற்காக இடங்களை கண்டறியப்பட்டு அரசுக்கு அனுப்பி வைத்து பரிசீலனை நிலையில் உள்;ளது. மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ.10 ஆயிரம் கோடி இஸ்ரோ நிறுவனம் ஆராய்ச்சிகளுக்கு வழங்கி வருகிறது.  விண்வெளியில் பயணம் செய்ய ஒரு மனிதன் சுமார் 30 கிலோ அளவிலான பொருட்களை எடுத்துசெல்ல வேண்டும். பூமியில் இருந்து மனிதன் சுமார் 3.5 லட்சம் முதல் 4 லட்சம் வரை தொலைவில் உள்ள நிலாவுக்கு சென்றுதான் அங்கிருந்து பிற கிரகங்களுக்கு செல்லும் வகையிலான திட்டங்கள் பிற்காலத்தில் உருவாக்கப்படவுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து பள்ளி மாணவ, மாணவியர்கள் அறிந்து கொள்ளும் வகையில் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இன்று தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி வளாகத்தில் கண்காட்சி திறந்து வைக்கப்பட்டது. இந்த வருடம் நடைபெறும் கண்காட்சி; 20வது விண்வெளி வார விழா கண்காட்சி ஆகும். இந்த விண்வெளி கண்காட்சியினை பள்ளி மாணவ, மாணவியர்கள் நன்றாக பார்த்து அறிவியல் தொழில்நுட்பங்களை தெரிந்துகொள்ள வேண்டும். மேலும், தங்களது நண்பர்களை அழைத்து வந்து அவர்களும் இந்த கண்காட்சியினை பார்த்து பயன்பெறும் வகையில் தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். உலக அளவில் தங்களது பெயர் நிலைத்து நிற்கும் வகையில் நாட்டிற்காக பாடுபட வேண்டும் என இஸ்ரோ முன்னாள் இயக்குநர்  பேசினார்.
அதனைத்தொடர்ந்து அறிவியல் புதுமை செய் என்ற தலைப்பிலான புத்தகத்தினை ISRO முன்னாள் இயக்குநர் பத்மஸ்ரீ ஆர்.எம்.வாசகம்  வெளியிட்டார். 
இந்நிகழ்ச்சியில் தலைவர் எக்ஷ்போ கமிட்டி ஜெபசிகாமணி, IPRC இயக்குநர் மூக்கையா, IPRC அசோசியேட் இயக்குநர் அழகுவேலு, துணை இயக்குநர் லுயிஸ் சாம் டைடஷ், தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி செயலாளர் சொக்கலிங்கம், தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி முதல்வர் முனைவர் வீரபாகு மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo