Onetamil News Logo

 71வது குடியரசு தின விழா ;தூத்துக்குடி பள்ளியில் எஸ்.ஐ ஜெயசித்ரா தேசியக் கொடி ஏற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.

Onetamil News
 

 71வது குடியரசு தின விழா ;தூத்துக்குடி பள்ளியில் எஸ்.ஐ ஜெயசித்ரா தேசியக் கொடி ஏற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.


தூத்துக்குடி 2020 ஜனவரி 27 ;இந்தியா முழுவதும் குடியரசு தினம் நேற்று கோலாகலமாக கொண்டாப்பட்டது. தூத்துக்குடியில் 71வது குடியரசு தின விழாவை முன்னிட்டு தூத்துக்குடி ஹோலிகிராஸ் ஹோம் சயின்ஸ் பள்ளியில் மத்திய பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரோடாபாய் ஜெயசித்ரா தேசியக் கொடி ஏற்றி மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று சிறப்புரை வழங்கினார். இந்த விழாவில் பள்ளி முதல்வர்,தாளாளர்,மாணவ,மாணவியர்கள் ,பெற்றோர் உட்பட பலர் பங்கேற்றனர்.
இந்தியக் குடியரசு நாள் ;இந்திய ஆட்சிமைக்கான ஆவணமாக இந்திய அரசு சட்டம் 1935-யின் மாற்றாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் செயலாக்கத்திற்கு வந்த நாளாகும்.1930ஆம் ஆண்டு இந்திய விடுதலை இயக்கத்தினர் பூர்ண சுவராஜ் என்ற விடுதலை அறைகூவலை நினைவுகூற  ஜனவரி 26 ஆம் நாள் விடுதலை நாளாக காந்தியடிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டது. 1950ஆம் ஆண்டில், விடுதலை பெறுவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பே காந்தியடிகள் ஏற்படுத்திய விடுதலை நாளான சனவரி 26ஆம் நாளை, மக்களாட்சி மலர்ந்த தினமாகக் கொண்டாட நேரு அமைச்சரவை முடிவு செய்து அறிவித்து செயல்படுத்தியது.1950 முதல் இது குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo