Onetamil News Logo

தூத்துக்குடியில் பொங்கல் விழாவை  முன்னிட்டு வடபாகம் காவல் ஆய்வாளர் பார்த்திபன் தலைமையில்  ஏழை எளிய மக்களுக்கு 11  வது ஆண்டாக   புத்தாடை வழங்கும் விழா  

Onetamil News
 

தூத்துக்குடியில் பொங்கல் விழாவை  முன்னிட்டு வடபாகம் காவல் ஆய்வாளர் பார்த்திபன் தலைமையில்  ஏழை எளிய மக்களுக்கு 11வது ஆண்டாக புத்தாடை வழங்கும் விழா  


தூத்துக்குடி 2019 ஜனவரி 13 ; தூத்துக்குடியில் ஏழை எளிய மக்களுக்கு 11  வது ஆண்டாக  புத்தாடை வழங்கும்  விழா நடைபெற்றது.                                                                                                                                                      
தூத்துக்குடி இரண்டாம் கேட் அருகில் ஆனந்தா திருமண மகாலில் வைத்து உயிர்த்தோழன் நண்பர்கள் குழு சார்பாக    புத்தாண்டை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு புத்தாடை வழங்கும் விழா 11  வது ஆண்டாக   நடைபெற்றது.  இவ் விழாவிற்கு வடபாகம் காவல் ஆய்வாளர் பார்த்திபன்  தலைமை தாங்கி பேசினார் அப்பொழுது அவர் பேசியதாவது..நான் கடந்த ஆண்டும் வந்துள்ளேன்,இந்த ஆண்டும் வந்திருக்கிறேன் மிகவும் மகிழ்ச்சி உங்களை போன்ற முதியவர்களுக்கு உதவிகள் செய்வது மிகவும் சாலச்சிறந்தது.உண்மையிலே மனமுவந்து பாராட்டுகிறேன்,இந்த ஆண்டை விட அடுத்த ஆண்டு இன்னும் அதிகமான முதியோர்களுக்கு ஆடைகள் வழங்க வேண்டும்.உங்கள் மகிழ்ச்சியில் எங்கள் மகிழ்ச்சி உள்ளது.என்று கூறி வருகை தந்த 300 முதியோர்களுக்கு  புத்தாடைகள் வழங்கினார்.   சமூக ஆர்வலர்  ஜெகஜீவன்  முன்னிலை வகித்தார், இவ்விழாவில் சிறப்புரையாற்றினார் ஜே.பி.என் ஸ்டூடியோ உரிமையாளர்  ஜே.பி.என்,விழாவில் கிட்டார் பார்த்திபன் நன்றி கூறினார்.  பலர் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo