Onetamil News Logo

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆவின் பால் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் 

Onetamil News
 

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆவின் பால் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் 


தூத்துக்குடி 2019 ஜனவரி 13 ;தூத்துக்குடி மாவட்டத்தில் ஆவின் பால் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது -ஆவின் தலைவர் ந.சின்னத்துரை  தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது....அம்மா நல்லாசியுடன் தமிழகமுதல்வர் எடப்பாடிபழனிச்சாமி ஆவின் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்குபொங்கல் பரிசாகஅறிவித்தஉற்பத்தியுடன் கூடியஊக்கத் தொகைரூ.1000-ம் மற்றும் பால் உபபொருட்கள் நெய் ½கிலோ,மைசூர்பா½கிலோ,பால்கோவா¼கிலோமற்றும் நறுமணபால் ஆகியவற்றை திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆவின் தலைவர் என்.சின்னத்துரை வழங்கி ஆவின் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுசங்கஉறுப்பினர்கள்,பால் நுகர்வோர்களுக்கு பொங்கல் வாழ்த்தினை தெரிவித்துக் கொண்டார். 
 பால் விற்பனைஅதிகரிக்கவும்,பொதுமக்களுக்கும் எந்தநேரத்திலும் தரமானபால்  கிடைக்கவும் விற்பனை முகவர்களுக்கு குளிர் சாதனப்பெட்டிகள் கொள்முதல் செய்து வழங்கவும்.
 கால்நடைகளுக்கு பரவிவரும் நோய்களை தடுக்கவும், நோய் வராமல் பாதுகாக்கவும் மருந்து கொள் முதல் செய்து வழங்கவும்.
 ஓன்றியத்தில் பால் விற்பனை 42000 லிட்டரில் இருந்து 45000 லிட்டராக உயர்ந்துள்ளது. மேலும் தயிர் விற்பனையை அதிகரிக்கும் பொருட்டும்,சுகாதாரமுறையில் கப்பில் அடைக்கப்பட்ட தயிர் விற்பனை செய்யப்படவுள்ளது.
 பால் விற்பனை இலக்கு 45,000 லிருந்து 50000 லிட்டராக இலக்கு நிர்ணயிக்கவும், பால் உபபொருட்கள் விற்பனை 90 இலட்சம்ருபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருவதை 1.5 கோடிஎன இலக்கு நிர்ணயித்து பால் உபபொருட்கள் விற்பனையைஅதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
 மேலும் 11.01.2019 அன்று தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டத்திலுள்ள நெடுங்குளம் கிராம பால் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு 50 கறவை மாட்டுக் கடன் திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டஆவின் தலைவர்  என்.சின்னத்துரை வழங்கினார்கள்.  இதன் மூலம் நாள் ஒன்றுக்குசுமார் 250 லிட்டர் பால் உற்பத்திஅதிகரிக்கும்.  மேலும் தூத்துக்குடிமாவட்டத்தில் 500 கறவை மாட்டு கடன் வழங்குவதற்கான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இதன் மூலம் ஒன்றிய பால் உற்பத்திநாள் ஒன்றுக்கு சுமார் 3000 லிட்டர் அதிகரிக்கும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.   
 25 ஆண்டுகள் விபத்தின்றி வாகனம் ஓட்டி அப்பழுகற்ற முறையில் பணியாற்றிய ஓட்டுநர்களுக்கு 4 கிராம் தங்கநாணயம் பரிசாக ஆவின் தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது. இந் நிகழ்ச்சியில் பொதுமேலாளர் ரங்கநாததுரை,உதவி பொதுமேலாளர் அருணகிரிநாதன்,உதவி பொதுமேலாளர் (பொறி)திவான் ஒளி,மேலாளர் (விற்பனை)சாந்தி,அனுசியாசிங்,அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டுசிறப்பித்தனர்.  
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo