Onetamil News Logo

தூத்துக்குடிக்கு வந்த சீனா கப்பலில் கொரோனா பரிசோதனை நடத்தப்படவில்லை என குற்றச்சாட்டு ; 17 சீனர்கள் கப்பல் மூலம் வந்ததால் வ.உ.சி துறைமுகத்தில் பரபரப்பு

Onetamil News
 

தூத்துக்குடிக்கு வந்த சீனா கப்பலில் கொரோனா பரிசோதனை நடத்தப்படவில்லை என குற்றச்சாட்டு ; 17 சீனர்கள் கப்பல் மூலம் வந்ததால் வ.உ.சி துறைமுகத்தில் பரபரப்பு


தூத்துக்குடி 2020 பிப்ரவரி 16 ;சீனாவிலிருந்து விமானம் மற்றும் கப்பல் மூலம் இந்தியா வர மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில் 17 சீனர்கள் கப்பல் மூலம் வந்ததால் வ.உ.சி துறைமுகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 143 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலி எண்ணிக்கை 1631 ஆக உயர்ந்துள்ளது.ஏராளமானவர்கள் இறந்து உள்ளனர். இதனால் சீனாவுடனான போக்குவரத்து தொடர்பை பல்வேறு நாடுகள் துண்டித்து உள்ளன.இந்நிலையில் கடந்த மாதம் 17-ந் தேதி சீனா ஷியாமன் துறைமுகத்தில் இருந்து ரூயி என்ற சரக்கு கப்பல் புறப்பட்டது. இந்த கப்பல் கடந்த 14-ஆம் தேதிஅதிகாலை தூத்துக்குடிக்கு வந்து சேர்ந்தது. இந்த கப்பலில் 21 மாலுமிகள் உள்ளனர். இதில் 17 பேர் சீனாவையும், 4 பேர் மியான்மர் நாட்டையும் சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்த கப்பல் வ.உ.சி. துறைமுகத்துக்குள் அனுமதிக்கப்பட்டு அங்குள்ள கூடுதல் கப்பல் தளத்தில் நிறுத்திவைக்கப்பட்டது. அந்த கப்பலில் சீனா மாலுமிகள் இருந்ததால் துறைமுகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
சுகாதார அதிகாரி தலைமையில் கப்பலில் இருந்த மாலுமிகளுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டதா இல்லையா என்ற தகவலை துறைமுகசபை அதிகாரிகள் தெரிவிக்க வில்லை. இந்நிலையில் நேற்று கப்பலில் இருந்து சரக்குகளை இறக்கும் பணி நடந்து வருகிறது.
கடந்த 11ம் தேதி, மத்திய கப்பல்துறை இயக்குநர் அரவிந்த் சவுத்ரி, இந்தியாவில் உள்ள, அனைத்து துறைமுகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், 'சீனாவிற்கு சென்று வரும் கப்பல் ஊழியர்களையோ, சீன நாட்டினரையோ, எந்த துறைமுகத்திலும் நிறுத்துவதற்கோ, கப்பலில் இருந்து வெளியே செல்லவோ அனுமதிக்ககூடாது' என, குறிப்பிட்டுள்ளார்.இருப்பினும், பிப்.,13ம் தேதி வந்த, 'ரூயி' கப்பலை, தூத்துக்குடி துறைமுகத்திற்குள், அதிகாரிகள் அனுமதித்துள்ளனர்.
கப்பலில் வந்தவர்களுக்கு, 'கோவிட் - 19' சோதனை செய்யப்பட்டதா என்பதும், தெரியவில்லை. கப்பலில் வந்த சீனர்கள் வெளியே சென்றுள்ளார்களா என்பது குறித்தும், துறைமுக அதிகாரிகளுக்கு தெரியவில்லை.துறைமுக அதிகாரிகளின் பொறுப்பற்ற செயலால், தமிழகத்திலும், 'கோவிட் - 19' பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என பொதுமக்களிடையே அச்சம் நிலவுகிறது.
சீனாவில் இருந்து வந்த கப்பல் என்பதாலும், முழுமையாக பரிசோதனை நடைபெறவில்லை என சந்தேகம் எழுந்ததாலும், சரக்குகளை கையாளும் தொழிலாளர்களிடையே ஒருவித அச்ச உணர்வும் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது                                      
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo