Onetamil News Logo

தமிழக முதல்வர் வருகையை முன்னிட்டு தூத்துக்குடியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மதுரை, தென் மண்டல ஐ.ஜி சண்முக ராஜேஸ்வரன் ஆய்வு

Onetamil News
 

தமிழக முதல்வர் வருகையை முன்னிட்டு தூத்துக்குடியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மதுரை,தென் மண்டல ஐ.ஜி சண்முக ராஜேஸ்வரன் ஆய்வு


தூத்துக்குடி 2020 பிப்.18:தமிழக முதல்வர் வருகையை முன்னிட்டு தூத்துக்குடியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மதுரை, தென் மண்டல ஐ.ஜி சண்முக ராஜேஸ்வரன் ஆய்வு செய்தார். 
வருகிற 22.02.2020 அன்று தமிழக முதல்வர் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் பா. சிவந்தி  ஆதித்தனார் மணி மண்டபத்தை திறந்து வைக்க உள்ளார்கள். 
இந்த மணி மண்டபத்தை தமிழக முதலமைச்சர், திறந்து வைக்கிறார். அந்த விழாவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பல கோடி செலவில் அமைக்கப்பட்டு உள்ள புற்றுநோய் சிகிச்சைக்கான கருவியை முதல்வர் காணொளி மூலம் தொடங்கி வைத்து, மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்கள்.
இந்நிலையில், தமிழக முதல்வர் அவர்களின் வருகையை முன்னிட்டு மதுரை தென் மண்டல ஐ.ஜி சண்முக ராஜேஸ்வரன் ,திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி .,பிரவீன்குமார் அபிநபு .,மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், ஆகியோர் முதல்வர் பயணத்திட்டத்தில் இடம் பெற்றுள்ள பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 
பின்னர் அவர்கள்  தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை பார்வையிட்டு, அதன் முதல்வர் (பொறுப்பு) டாக்டர். குமரன், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி மற்றும் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் குமார், தூத்துக்குடி நகர துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo