Onetamil News Logo

தூத்துக்குடி பண்டாரம்பட்டியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கவன ஈர்ப்பு தர்ணா போராட்டம்

Onetamil News
 

தூத்துக்குடி பண்டாரம்பட்டியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கவன ஈர்ப்பு தர்ணா போராட்டம்


தூத்துக்குடி  2018 டிசம்பர் 7; ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி பண்டாரம்பட்டியில் 300க்கும் மேற்பட்டவர்கள் கவன ஈர்ப்பு தர்ணா போராட்டம் நடத்தினர்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக  தூத்துக்குடி பண்டாரம்பட்டியில் கவன ஈர்ப்பு தர்ணா போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி பண்டாரம்பட்டியில் பொது  மக்கள்  காலை திரண்டனர். அவர்கள் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்றுவதற்கு சட்டமன்றத்தில் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கவன ஈர்ப்பு தர்ணா போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு வக்கீல் அரிராகவன் தலைமை தாங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-
ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்காக நடந்த போராட்டத்தில் 13 பேரை பலிகொடுத்து உள்ளோம். ஆனாலும் எங்கள் கோரிக்கை முழுமையாக நிறைவேறவில்லை. தமிழக அரசு ஒரு அரசாணை பிறப்பித்து ஆலையை மூடியது. அந்த அரசாணையை யாரும் தடுக்க முடியாது, ஸ்டெர்லைட்டை திறக்க முடியாது என்று கூறினார்கள்.தற்போது ஒய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு ஆலையை திறப்பதற்கு ஏதுவான அறிக்கையை அளித்து உள்ளது. இந்த சூழ்நிலையில் அரசு தாமிர தொழிலை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்.முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீர்மானத்தை கொண்டு வர வேண்டும். எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி மக்களுக்காக குரல் கொடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo