Onetamil News Logo

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் மாபெரும் யோகா விழிப்புணர்வு - மாஸ் சூர்யநமஸ்கர் யோகா - 2019.

Onetamil News
 

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் மாபெரும் யோகா விழிப்புணர்வு - மாஸ் சூர்யநாமஸ்கர் யோகா - 2019.


தூத்துக்குடி 2019 ஜூன் 16 ;சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் மாபெரும் யோகா விழிப்புணர்வு - மாஸ் சூர்ய நமஸ்கர் யோகா - 2019  இன்று காலையில் நடந்தது.                                                                                                            
 தூத்துக்குடி விவேகானந்த கேந்த்ரா சார்பாக சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, யோகா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீ சாரதா பள்ளி, ஸ்ரீ லலிதா வித்தியாலயா, காமராஜ் மெட்ரிக், காமாட்சி வித்யாலயா, விவேகானந்த மெட்ரிக், அழகர் பப்ளிக், அமிர்தா வித்யாலயா, சக்தி விநாயகர் இந்து மேல்நிலை பள்ளி மற்றும் காரப்பேட்டை பெண்கள் மேல்நிலை பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட பிரம்மாண்டமான சூர்யநமஸ்கர் யோகா நடைபெற்றது.
விழிப்புணர்வு நிகழ்ச்சியினை தூத்துக்குடி மாநகராட்சி செயற்பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா துவங்கி வைத்தார், விவேகானந்த கேந்திரவின் ஆயுள்கால தொண்டர் விவேகவாணி பத்திரிகையின் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார், யோகா பயிற்சியாளர் பாலா ரோகினி வழிகாட்டுதலின் படி மாணவர்கள் சூர்யநாமஸ்கர் யோகா செய்ய கேந்திரவின் ஆயுள்கால தொண்டர் பரம குரு தேசபக்தி பாடல்கள் பாடினார். பங்குபெற்ற அனைத்து பள்ளிகளுக்கும் நினைவு பரிசு பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது சிறப்பாக செய்த அமிர்தா பள்ளிக்கும் பாரத் ரத்னா காமராஜ் பள்ளிக்கும் நினைவு சுழற்கோப்பையை சிறப்பு விருந்தினர் மற்றும் காமராஜ் கல்லுரி  முதல்வர்  நாகராஜன்  பங்கேற்றனர், தூத்துக்குடி காமராஜ் கல்லூரியின் டீன் முனைவர். சக்திவேல் நன்றியுரை கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி விவேகானந்த கேந்திரவின் நகர சஞ்சாலக்  சுபத்ரா வெற்றிவேல் மற்றும் சக நகர சஞ்சாலக்  கௌரி ராஜசேகர் ஆகியோர்  செய்திருந்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo