Onetamil News Logo

தூத்துக்குடியில் டி.எம்.பி சுழற்கோப்பைக்காக ஆண்கள் மற்றும் பெண்களுக்கான‌ மின்னொளி கூடைப்பந்து போட்டி 

Onetamil News
 

தூத்துக்குடியில் டி.எம்.பி சுழற்கோப்பைக்காக ஆண்கள் மற்றும் பெண்களுக்கான‌ மின்னொளி கூடைப்பந்து போட்டி   


தூத்துக்குடி 2019 ஜூலை 15 ;தூத்துக்குடியில் டி.எம்.பி சுழற்கோப்பைக்காக ஆண்கள் மற்றும் பெண்களுக்கான‌ மின்னொளி கூடைப்பந்து போட்டி நடைபெறுகிறது.
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி சுழற்கோப்பைக்காக Arise Steel நிறுவனத்தின் ஆகராவுடன் தூத்துக்குடி மாவட்ட கூடைப்பந்து கழகம் நடத்தும் ஒன்பதாவது அகில இந்திய அளவிலான கல்லூரி ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாபெரும் கூடைப்பந்து போட்டி தூத்துக்குடி ஜிம்கானா கிளப்பில் உள்ள வி.என்.எம். ஏ.டி. ராமகிருஷ்ணன்.அவர்களின் நினைவு மின்னொளி மைதானத்தில் வருகின்ற 17 7 2019 முதல் 21 7 2019 வரை நடைபெற உள்ளது.
17 7 2019 அன்று இந்தப் போட்டியை தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் தலைமையிலும் மற்றும் ஜிம்கானா கிளப்பின் தலைவர் ஜி.பி. ஜெயப்பிரகாஷ் மற்றும் தூத்துக்குடி மாவட்ட கூடைப்பந்து கழகத்தின் தலைவர் வி.வி.டி. பிரம்மானந்தம் ஆகியோரின் முன்னிலையிலும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கூடைப்பந்து போட்டியிணை துவக்கி வைக்க உள்ளனர்.
கூடைப்பந்து போட்டியில் ஆடவர் பிரிவில் ஜெயின் பல்கலைக்கழகம் பெங்களூரு எம் சி சி சென்னை கே டி டி பொறியியல் கல்லூரி காஞ்சிபுரம் லயோலா கல்லூரி சென்னை இந்துஸ்தான் பல்கலைக்கழகம் காஞ்சிபுரம் மற்றும் மார் இவானியஸ் கல்லூரி கேரளா ஆகிய அணிகள் பங்கேற்கின்றது.மகளிர் பிரிவில் எம் ஓ பி கல்லூரி எத்திராஜ் மகளிர் கல்லூரி சென்னை சென் ஜோசப் கல்லூரி கேரளா மார்,வானியஸ்  கல்லூரி திருவனந்தபுரம் இந்துஸ்தான் பல்கலைக்கழகம் காஞ்சிபுரம் சென்னை மற்றும் சென் ஜோசப் காலேஜ் ஆப் காமர்ஸ், பெங்களூரு ஆகிய அணிகள் கலந்து கொள்கின்றன.
இந்தப் போட்டியை ஆயிரத்தி ஐநூறு பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளது பெண்களுக்கு தனி இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இறுதி நாளான வரும் 21 ம் தேதி அன்று கூடைப்பந்தாட்ட போட்டியில் வெற்றி பெறும் ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினருக்கு பரிசுகளை கே.வி.   தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி நிர்வாக இயக்குனர் ராமமூர்த்தி தூத்துக்குடி  வழங்க உள்ளார்.
இப்போட்டிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட கூடைப்பந்து கழகத்தின் செயலாளர் எஸ் . சுஜேஷ் ராஜா பொருளாளர் எஸ். நார்டன்  தமிழ்நாடு கூடைப்பந்து கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் டி ஆர். பாலன் மற்றும் கழக உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo