Onetamil News Logo

தமிழகம் முழுவதும் பத்திரிகையாளர் ஆர்ப்பாட்டம் எதிரொலி ;சிவகாசியில், வார இதழ் நிருபரை தாக்கிய, இருவர் கைது 

Onetamil News
 

தமிழகம் முழுவதும் பத்திரிகையாளர் ஆர்ப்பாட்டம் எதிரொலி ;சிவகாசியில், வார இதழ் நிருபரை தாக்கிய, இருவர் கைது 


சிவகாசி 2020 மார்ச் 5 :தமிழகம் முழுவதும் பத்திரிகையாளர் ஆர்ப்பாட்டம் எதிரொலி ;சிவகாசியில், வார இதழ் நிருபரை தாக்கிய, இருவர் கைது செய்யப்பட்டனர். 
இதுகுறித்து தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்று பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.இந்த நிலையில் சிவகாசியில், வார இதழ் நிருபரை தாக்கிய, இருவர் கைது செய்யப்பட்டனர். 
விருதுநகர் மாவட்டம் ,சிவகாசியில், வார இதழ் நிருபரை தாக்கிய, இருவர் கைது செய்யப்பட்டனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசியைச் சேர்ந்தவர் கார்த்தி, 49; 'குமுதம் ரிப்போர்ட்டர்' வார இதழ் நிருபராக பணிபுரிகிறார்.
நேற்று முன்தினம் வெளியான இதழில், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த, பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சாத்துார், எம்.எல்.ஏ., ராஜவர்மன் இடையே, உட் கட்சியில் பூசல் என செய்தி வெளியானது.அன்று இரவு, திருத்தங்கல் சாலையில் உள்ள ஓட்டல் முன், இரவு, 8:30 மணிக்கு கார்த்தி வந்தபோது, அவரை வழிமறித்த ஒரு கும்பல், கம்பிகளால் சரமாரியாக தாக்கியது. காயமடைந்த கார்த்தி, சிவகாசி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.கார்த்தி கூறுகையில், ''ஓட்டலில் டீ குடித்து, வெளியே வந்தபோது, அடையாளம் தெரியாத நபர் கள், கம்பிகளால் தலையில் தாக்கினர்,'' என்றார். இது தொடர்பாக, பாண்டியராஜ், 40, பூமுருகன், 43, ஆகியோரை, டவுன் போலீசார் நேற்று கைது செய்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo