Onetamil News Logo

கலால் துறை அதிகாரிகள் டாஸ்மாக் ஊழியர்களிடம் மாமூல் கேட்பதை தடுத்திட  தூத்துக்குடி மக்கள் குறை தீர்க்கும் முகாமில் டாஸ்மாக் ஊழியர் சங்க தூத்துக்குடி மாவட்ட தலைவர் முருகன் கலெக்டர் யிடம் கோரிக்கை

Onetamil News
 

கலால் துறை அதிகாரிகள் டாஸ்மாக் ஊழியர்களிடம் மாமூல் கேட்பதை தடுத்திட  தூத்துக்குடி மக்கள் குறை தீர்க்கும் முகாமில் டாஸ்மாக் ஊழியர் சங்க தூத்துக்குடி மாவட்ட தலைவர் முருகன் கலெக்டர் யிடம் கோரிக்கை


 தூத்துக்குடி march 12 ;தூத்துக்குடி மக்கள் குறை தீர்க்கும் முகாமில் கலால் துறை அதிகாரிகள் டாஸ்மாக் ஊழியர்களிடம் மாமூல் கேட்பதை தடுத்திட  டாஸ்மாக் ஊழியர் சங்க தூத்துக்குடி மாவட்ட தலைவர் முருகன் கலெக்டர் யிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.                                                            
  தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை  மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கலெக்டர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார்.அதில் வழங்கிய கோரிக்கை மனுவில் கூறியதாவது... டாஸ்மாக் ஊழியர் சங்க தூத்துக்குடி மாவட்ட தலைவர் முருகன் மற்றும் நிர்வாகிகள் மனு கொடுத்தனர். அந்த மனுவில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கலால் துறை அதிகாரிகள் ஊழியர்களிடம் பணம் கேட்டு நிர்பந்தம் செய்வதை தடுக்க வேண்டும். சராசரி விற்பனை அடிப்படையிலும் பணிமூப்பு அடிப்படையிலும் அதிகப்படியான ஊழியர்கள் இருக்கும் கடைகளில் இருந்து குறைந்த ஊழியர்கள் இருக்கும் கடைகளுக்கு ஊழியர்களை மாற்ற வேண்டும். பண்டிகை விடுமுறை, 8 மணி நேர வேலை போன்ற தொழிலாளர் நல சட்டங்களை டாஸ்மாக் ஊழியர்களுக்கு அமல்படுத்த வேண்டும். மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் ஊழியர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும். அனைத்து டாஸ்மாக் ஊழியர்களையும் நிரந்தரம் செய்து பணி பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்று கூறி இருந்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo