Onetamil News Logo

கொலை, கொலை முயற்சி, மணல் கடத்தல் உள்பட 7 வழக்குகளில் ஈடுபட்ட ரவுடி காளிதாஸ் குண்டர் சட்டத்தின் கீழ் கைது

Onetamil News
 

கொலை, கொலை முயற்சி, மணல் கடத்தல் உள்பட 7 வழக்குகளில் ஈடுபட்ட ரவுடி காளிதாஸ் குண்டர் சட்டத்தின் கீழ் கைது


தூத்துக்குடி  2020 செப் 18 ;  கடந்த 05.09.2020 அன்று சாயர்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஸ்ரீவைகுண்டம், பேட்மாநகரம், வீரர் சுந்தரலிங்கம் நகரைச் சேர்ந்த இசக்கியப்பன் மகன் காளிதாஸ்(25) என்பவர் பழ வியாபாரி ஒருவரை அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சாயர்புரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து காளிதாஸை கைது செய்தனர்.
மேற்படி எதிரி காளிதாஸ் என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள சாயர்புரம் காவல் நிலைய ஆய்வாளர் முத்துலெட்சுமி அவர்கள் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு அறிக்கை சமர்ப்பித்தார்.
பின் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார்  பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி  மேற்படி எதிரி காளிதாஸ் என்பவரை குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சாயர்புரம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. முத்துலெட்சுமி அவர்கள், எதிரி காளிதாஸ் என்பவரை குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo