Onetamil News Logo

கோவில்பட்டி ஒன்றிய பகுதியில் நெடுஞ்சாலைதுறை மற்றும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மேம்பாட்டு திட்டம் மூலம் 5 கிராம பகுதிகளில் ரூ.151.44 இலட்சம் மதிப்பில் புதிய தார்சாலை அமைக்கும் பணிகள் தொடக்கம் 

Onetamil News
 

கோவில்பட்டி ஒன்றிய பகுதியில் நெடுஞ்சாலைதுறை மற்றும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மேம்பாட்டு திட்டம் மூலம் 5 கிராம பகுதிகளில் ரூ.151.44 இலட்சம் மதிப்பில் புதிய தார்சாலை அமைக்கும் பணிகள் தொடக்கம் 


தூத்துக்குடி 2019 ஜனவரி 12 ;தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு மற்றும் கோவில்பட்டி ஒன்றிய பகுதியில் நெடுஞ்சாலைதுறை மற்றும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மேம்பாட்டு திட்டம் மூலம் 5 கிராம பகுதிகளில் ரூ.151.44 இலட்சம் மதிப்பில் புதிய தார்சாலை அமைக்கும் பணிகளை  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தொடங்கி வைத்தார்கள்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு மற்றும் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காப்புலிங்கம்பட்டி - அசூர் சாலை, காப்புலிங்கம்பட்டி சாலை நெகிழி பயன்படுத்தி உறுதிப்படுத்துதல், வில்லிசேரி சாலை தரத்தினை மேம்படுத்துதல் ஆகிய 4 கிராம சாலைகள்; நெடுஞ்சாலைத்துறை மூலம் ரூ.124.10 இலட்சம் மதிப்பில மேம்படுத்தும் பணிகள் மற்றும் ஊரக வளர்ச்சி துறை மூலம் கிருஷ்ணாநகர் - மந்தித்தோப்பு சாலை ரூ.27.34 இலட்சம் மதிப்பில் மேம்படுத்தும் பணிகள் துவக்க விழா மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,  தலைமையில் இன்று (11.01.2019) நடைபெற்றது. இவ்விழாவில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ  பூமி பூஜையில் கலந்துகொண்டு சாலை மேம்பாட்டு பணிகளை தொடங்கி வைத்தார். 
இவ்விழாவில்  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசியதாவது:- 
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழ்நாடு கிராமப்புறங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படும் வகையில் சாலை விரிவாக்கும் பணிகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து செயல்படுத்தி வந்தார்கள்.  தொடர்ந்து அம்மா அவர்களின் வழியிலான தமிழக அரசு கிராமப்புற கட்டமைப்பு வசதிகளை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. கோவில்பட்டி மற்றும் கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்தில் ஆசூர் - காப்புலிங்கம்பட்டி, வில்லிசேரி ஆகிய கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று இன்றைய தினம் தார் சாலை மேம்படுத்தும் பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த கிராமப் பகுதிகளில்  உள்ள விவசாயிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், தொழிற்;சாலை சென்று வேலை பார்க்கும் தொழிலாளர்கள் ஆகியோர் பயனடையும் வகையில் இந்த தார்சாலை 3 மாத காலத்திற்குள் விரைவாக அமைக்கப்பட உள்ளது. 
வில்லிசேரி கிராமத்தில் ஏற்கனவே பேவர் பிளாக் அமைத்தல், 3 சிறுபாலம் அமைத்தல், கழிவுநீர் கால்வாய் அமைத்தல் ஆகிய பணிகள் செய்யப்பட்டுள்ளது.  மேலும்,  மகளிர் சுகாதார வளாகம் முற்றிலும் சேதமடைந்துவிட்டதால் அதை இடித்து அதே இடத்தில் புதிய சுகாதார வளாகம் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அய்யனார்குளம் ஆண்கள் சுகாதார வளாகம் ரூ.1 லட்சம் செலவில் பராமரிப்பு பணிகள் செய்யப்பட உள்ளது. மெய்யத்தான்பட்டி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் விரைவில் இக்கிராமத்திற்கு தார்சாலை அமைக்கப்பட உள்ளது. கயத்தாறு அம்மன்கோவில் செல்லும் சாலை புதிதாக அமைக்கப்படவுள்ளது. அருந்ததியர் தெரு மேலக்காலணி, நடுக்காலணி செல்லும் சாலை மேம்பாடு செய்யப்பட்டது. 
பயிர் காப்பீட்டு திட்டத்தில் சிரமங்களை சரி செய்து ஒரு ஹெக்டேருக்கு ரூ.7,000/- முதல் ரூ.13,000/- வரை நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த கிராம மக்களின் அனைத்து தேவைகளையும் கேட்டறிந்து உடனடியாக நிறைவேற்றி தரப்படும் என மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ கூறினார்.
விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, பேசியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில்; 2018-2019ம் ஆண்டுக்கு ரூ.90 கோடி மதிப்பீட்டில் கிராமப்புற சாலை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் இன்றைய தினம் கயத்தார் மற்றும் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் புதிய தார் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து கிராம பகுதிகளுக்கும் தேவையான அடிப்படை வசதிகளையும் கண்டறிந்து பூர்த்தி செய்வதற்கு என  துணை ஆட்சியர் நிலையிலான கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு குடிநீர், அங்கன்வாடிகளில் கழிவறை வசதி, தெருவிளக்கு, இணைப்பு சாலை வசதிகள், கழிவு நீர் கால்வாய் வசதி என அனைத்து அடிப்படை தேவைகளும் முறையாக பராமரிக்கும் பணிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி பேசினார்.
விழாவில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மோகன், சின்னப்பன், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் .பாலசுப்பிரமணியன், உதவி கோட்ட பொறியாளர் ராஜூ, உதவி பொறியாளர் சின்னசாமி, ஊரக வளர்ச்சி துறை உதவி செயற்பொறியாளர் சண்முகநாதன், முக்கிய பிரமுகர்கள் அய்யாத்துரைபாண்டியன், விஜயபாண்டியன், ரமேஷ், வினோபாஜி மற்றும் கயத்தார், கோவில்பட்டி வட்டார வளாச்ச்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo