Onetamil News Logo

திரைப்பட நடிகர் இமான் அண்ணாச்சி நாளை 14ம் தேதி அன்று தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் கனிமொழிக்கு வாக்கு சேகரிப்பு

Onetamil News
 

திரைப்பட நடிகர் இமான் அண்ணாச்சி நாளை 14ம் தேதி அன்று தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் கனிமொழிக்கு வாக்கு சேகரிப்பு


தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி கருணாநிதி மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் வசந்தம் ஜெயக்குமார் ஆகியோரை ஆதரித்து திரைப்பட நடிகர் இமான் அண்ணாச்சி நாளை 14.04.19 அன்று தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் வாக்கு சேகரிப்பு; மாவட்ட பொறுப்பாளர் P. கீதா ஜீவன் எம்.எல்.ஏ அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது... மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திருமிகு. கனிமொழி கருணாநிதி மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் வசந்தம் ஜெயக்குமார் ஆகியோரை ஆதரித்து திரைப்பட நடிகர் இமான் அண்ணாச்சி அவர்கள் நாளை 14.04.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீழ்க்கண்ட இடங்களில் தீவீர வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.
1.    மாலை 04.00 மணி    வேப்பலோடை
2.     மாலை 04.30 மணி    குளத்தூர்
3.    மாலை 05.00 மணி    கெச்சிலாபுரம்
4.    மாலை 05.30 மணி    புளியங்குளம்
5.    மாலை 06.00 மணி    பூசனூர்
6.    மாலை 06.30 மணி    மார்த்தாண்டம்பட்டி
7.    இரவு 07.00 மணி    மந்திகுளம்
8.    இரவு 07.30 மணி    இலந்தகுளம்
9.    இரவு 08.00 மணி    மீனாட்சிபுரம்
10.    இரவு 08.30 மணி    அயன்செங்கல்படை

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo