Onetamil News Logo

கொரோனா விழிப்புணர்வு தகவல் வாகனத்திற்கு சிறப்பான வரவேற்பு  ; ரூரல் டி.எஸ்.பி.கலைக்கதிரவன் ,காவல் ஆய்வாளர் முத்து சுப்பிரமணியன் ஆகியோருக்கு பாராட்டு 

Onetamil News
 

கொரோனா விழிப்புணர்வு தகவல் வாகனத்திற்கு சிறப்பான வரவேற்பு  ; ரூரல் டி.எஸ்.பி.கலைக்கதிரவன் ,காவல் ஆய்வாளர் முத்து சுப்பிரமணியன் ஆகியோருக்கு பாராட்டு 


தூத்துக்குடி 22 மார்ச் 2020 ஞாயிற்றுக்கிழமை;தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையப் பகுதியில் கொரோனா விழிப்புணர்வு தகவல் வாகனத்திற்கு சிறப்பான வரவேற்பு  வழங்கி ரூரல் டி.எஸ்.பி.கலைக்கதிரவன் ,காவல் ஆய்வாளர் முத்து சுப்பிரமணியன் ஆகியோரை பாராட்டினார்கள்.
தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய பகுதி பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் பற்றியும் ,மார்ச் 22ம் தேதி வீட்டை விட்டு வெளியே வரக்கூடாததை பற்றியும்  விழிப்புணர்வு தகவல் வாகனத்தை நேற்று தூத்துக்குடி ஊரக துணை காவல் கண்காணிப்பாளர் பி.கலைக்கதிரவன் தொடங்கி வைத்தார். 
இந்த நிலையில் மீளவிட்டான்,சில்வர்ப்புறம்,சின்னக்கண்ணுபுரம்,பர்மா காலனி, லூசியா நகர்,வி.எம்.எஸ்.நகர்,அன்பு நகர், பாலையாபுரம், மடத்தூர், முருகேசன் நகர்,ஆசீர்வாத நகர்,நிகிலேசன் நகர்,சந்திராசா நகர்,கதிர்வேல் நகர்,பால்பாண்டி நகர்,கோக்கூர் ,அன்னை தெரசா நகர், பி & டி காலனி, ராஜகோபால்நகர், மகிழ்ச்சிபுரம், மங்கலாபுரம்,ராஜீவ் நகர் ,மில்லர்புரம் ஹௌசிங் போர்டு காலனி, சங்கரப்பேரி, தளவாய்புரம் ,கே.டி.சி.நகர், எட்டயாபுரம் ஹௌசிங் போர்டு காலனி,ஆதிபராசக்தி நகர் முத்தம்மாள் காலனி, விஸ்வபுரம், நேதாஜி நகர், சுப்ரமணியபுரம், பண்டராம்பட்டி, குறிஞ்சி நகர்,ஐயப்பன் நகர் ,இந்திரா நகர் ,தெற்கு வீரபாண்டியாபுரம், காயலூரணி, குமாரெட்டியாபுரம், ஐயனடைப்பு,சோரீஸ்புரம்,இந்திரா நகர்,மாதவன் நகர்,சிவசக்தி நகர்,சண்முகபுரம்,பொன்னகரம் போன்ற பகுதிகளில் உள்ள மக்கள் விழிப்புணர்வு பெற்றிட விளம்பரம் செய்யப்பட்டது.இந்த பகுதி பொது மக்கள்,நல விரும்பிகள், தூத்துக்குடி ஊரக துணை காவல் கண்காணிப்பாளர் பி.கலைக்கதிரவன், சிப்காட் காவல் ஆய்வாளர் முத்து சுப்பிரமணியன் ஆகியோரை பொதுமக்கள் பாராட்டினார்கள்.   
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo