Onetamil News Logo

உப்பாற்று ஓடையில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை வெட்டி அகற்ற வேண்டும்  ;முள்ளக்காடு,முத்தையாபுரம் ,அத்திமரப்பட்டி கிராம விவசாயிகள் சங்கத் தலைவர் அழகுராஜா பேட்டி

Onetamil News
 

உப்பாற்று ஓடையில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை வெட்டி அகற்ற வேண்டும்  ;முள்ளக்காடு, முத்தையாபுரம் ,அத்திமரப்பட்டி கிராம விவசாயிகள் சங்கத் தலைவர் அழகுராஜா பேட்டி


தூத்துக்குடி 2020 ஜூலை 8 ; தூத்துக்குடி அத்திமரப்பட்டியில் உப்பாற்று ஓடையில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என்று முள்ளக்காடு,முத்தையாபுரம்,அத்திமரப்பட்டி கிராம விவசாயிகள் சங்கத் தலைவர் அழகுராஜா கோரிக்கை விடுத்துள்ளார். 
இதுகுறித்து தாமிரபரணி வடகால் கோரம்பள்ளம் குளம் பாசனர் சங்கம் மடை எண் -2 நீரினை பயன்படுத்துவோர் சங்கம் எண் 60, முள்ளக்காடு, முத்தையாபுரம் , அத்திமரப்பட்டி கிராம விவசாயிகள் சங்கத் தலைவர் அழகுராஜா  தெரிவித்தார்.மேலும் அவர் கூறியதாவது, 
உப்பாற்று ஓடையில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி  -அத்திமரப்பட்டி இருந்து காலங்கரை , பகுதியில் உள்ள உப்பாற்று ஓடையில், மழைக்காலங்களில் மட்டுமே தண்ணீர் செல்கிறது. மற்றபடி கோரம்பள்ளம் குளம் தண்ணீர் திறக்கும் பொழுது உப்பாறு அணை மூலம்கடலுக்கு வெள்ள நீர்  செல்கிறது.. உப்பாற்று  கால்வாயில் இருந்து உபரி நீர் ,மழைநீர் கடலுக்கு மட்டுமே செல்கிறது..  மழைக்காலங்களில் உப்பாற்று ஓடையில் செல்லும் தண்ணீர், பல தடுப்பணைகளில் தேக்கி வைக்கப்பட்டு இருந்தால் பாசனத்துக்கு பயன்படுத்தலாம். இந்நிலையில், உப்பாற்று ஓடை முழுவதும் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளது. இதனால் மழைக்காலத்தில்கூட தண்ணீர் செல்ல முடியாதவாறு கருவேல மரங்கள் உறிஞ்சிவிடுகின்றன. இதனால்,  தண்ணீர் செல்வதில் தடை ஏற்படுகிறது. ஏற்கனவே, தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த பகுதி  கருவேல மரங்களால் மேலும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, உப்பாற்று ஓடை முழுவதும் நிறைந்துள்ள சீமை கருவேல மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo