Onetamil News Logo

தூத்துக்குடி குமாரகிரியில் மாற்றுக்கட்சியை சேர்ந்தவர்கள் தேமுதிகவில் இணைந்தனர்.

Onetamil News
 

தூத்துக்குடி குமாரகிரியில் மாற்றுக்கட்சியை சேர்ந்தவர்கள் தேமுதிகவில் இணைந்தனர். 


தூத்துக்குடி 2019 பிப்ரவரி 13 ;தூத்துக்குடி ஒன்றிய தேமுதிக சார்பில் புதுக்கோட்டை அருகேயுள்ள குமாரகிரி பஞ்சாயத்தில் தேமுதிகவின் 19வது ஆண்டு கொடி அறிமுக நாள் விழா தெற்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகநயினார் ஆலோசனையின்பேரில் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு ஒன்றிய அவைத்தலைவர் அதிசயராஜ் தலைமை வகித்தார். ஒன்றிய துணை செயலாளர் மகாராஜன் நிர்வாகிகள் முத்துராஜ், செல்வராஜ், முல்லைகண்ணன், மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி கழக செயலாளர் ராஜ்குமார் வரவேற்றார்.
விழாவினை முன்னிட்டு தூத்துக்குடி ஒன்றிய செயலாளர் செந்தில்குமார்  கொடி ஏற்றிவைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். அதனைத்தொடர்ந்து நடைபெற்ற விழாவில், ஊராட்சி செயலாளர் ராஜ்குமார் ஏற்பாட்டின்பேரில் மாற்றுக்கட்சியை சேர்ந்த சுமார் 25க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் முன்னிலையில் தேமுதிகவில் இணைந்தனர்.இதில், முக்கிய நிர்வாகிகள் பாக்யராஜ், வெங்கடேஷ், முத்துராமன், விஜயகுமார், ராமமூர்த்தி, ரவிசங்கர், கணேசன் மற்றும் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo