Onetamil News Logo

தூத்துக்குடி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கம் ரூ.1,000/- வழங்கும் திட்டத்தில் பயன்பெற்ற பயனாளிகள்  அம்மா அரசுக்கு நெஞ்சார்ந்த நன்றி

Onetamil News
 

 

தூத்துக்குடி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கம் ரூ.1,000/- வழங்கும் திட்டத்தில் பயன்பெற்ற பயனாளிகள்  அம்மா அரசுக்கு நெஞ்சார்ந்த நன்றி


தூத்துக்குடி, 2020 ஜன. 13; தமிழ்மொழி பேசும் மக்கள் அனைவரும் சாதி, மத பேதமின்றி கொண்டாடும் ஒரே விழா பொங்கல் விழாவாகும். ஏழை, எளிய மக்களும் பொங்கல் பண்டிகையை இனிமையாக பொங்கல் வைத்து சிறப்போடு கொண்டாடும் வகையில்  புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தாயாக இருந்து தமிழக மக்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தினை கொண்டு வந்தார்கள். முதன்முதலாக பொங்கல் பரிசு தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்ந்த திராட்சை,     5 கிராம் ஏலக்காய், 2 அடி கரும்புத்துண்டு ஆகிய பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.100/- ரொக்கமும் வழங்கி ஏழை, எளிய மக்கள் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட வழிவகை செய்தார்கள். 
 அம்மா அவர்களின் வழியில் செயல்படும்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் மிக சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். மேலும் அனைத்து மக்களும் கொண்டாடக்கூடிய பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டம் மற்றும் ரொக்கம் ரூ.100/-ல் இருந்து ரூ.1,000/- ஆக உயர்த்தி வழங்கினார்கள். மேலும், மாண்புமிகு  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை தலைமை செயலகத்தில், தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி அரிசி குடும்ப அட்டைதாரர்களின் குடும்பங்கள் பயன்பெறும் வகையில், பொங்கல் பரிசு தொகுப்புடன், பொங்கல் ரொக்க பணம் ரூ.1,000/- ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் திட்டம் மற்றும் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டங்களை துவக்கி வைத்தார்கள். அதனடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் அரிசி பெறும் 2 கோடியே 63 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000/- மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டமானது சுமார் ரூ.2,363 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ரூ.484.25 கோடி மதிப்பில் 1 கோடியே 67 லட்சம் விலையில்லா வேட்டி, சேலை வழங்கப்படுகிறது. 
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 957 நியாய விலைக்கடைகளில் இணைக்கப்பட்டுள்ள 4,78,877 தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு மொத்தம் ரூ.50.25 கோடி மதிப்புள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் பொங்கல் ரொக்கத்தொகை ரூ.1,000/- ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. 
மேலும், தமிழக அரசின் விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டத்தின்கீழ், தூத்துக்குடி வட்டத்தில் 89,019 சேலைகள், 88,834 வேட்டிகள், திருவைகுண்டம் வட்டத்தில் 26,874 சேலைகள், 26,760 வேட்டிகள், திருச்செந்தூர் வட்டத்தில் 49,197 சேலைகள், 49,197 வேட்டிகள், ஏரல் வட்டத்தில் 30,358 சேலைகள், 30,365 வேட்டிகள், சாத்தான்குளம் வட்டத்தில் 21,215 சேலைகள், 21,220 வேட்டிகள், கோவில்பட்டி வட்டத்தில் 54,636 சேலைகள், 54,574 வேட்டிகள், ஓட்டப்பிடாரம் வட்டத்தில் 26,177 சேலைகள், 26,176 வேட்டிகள், விளாத்திகுளம் வட்டத்தில் 33,673 சேலைகள், 33,677 வேட்டிகள், எட்டயபுரம் வட்டத்தில் 18,232 சேலைகள், 18,226 வேட்டிகள், கயத்தார் வட்டத்தில் 28,242 சேலைகள், 28,242 வேட்டிகள் என மொத்தம் 3,77,623 சேலைகள், 3,77,271 வேட்டிகள் ரூ.4 கோடியே 18 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டு வருகிறது. 
தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு பெற்ற தூத்துக்குடி கோரம்பள்ளத்தை சேர்ந்த திருமதி.ரத்தினமரியபுஷ்பம் கூறியதாவது:-
எனது கணவர் பெயர் திரு.கிறிஸ்து ராஜன் கூலி வேலை செய்து அன்றாட குடும்ப செலவுகளை மேற்கொண்டு வருகிறார். தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை ஒவ்வொரு வருடமும் சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாட வேண்டும் என்று ஆசையாக இருந்தது. ஆனால் அதற்கு போதிய வருமானம் இல்லாததால் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட முடியவில்லை. ஏனென்றால் எனது குழந்தைகள் வெளியூரில் வசித்து வேலை பார்த்து வருகிறார்கள். நானும், எனது கணவரும் தனியாக இருப்பதால் வயதான காலத்தில் பொங்கல் பொருட்கள் வாங்குவதற்கு மிகவும் சிரமப்பட்டேன். இந்த வருடம் எனது மகள் வெளியூரில் இருந்து வருகை தந்ததால் அவருடன் சென்று தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கம் ரூ.1000/- வாங்கினேன். இதன்மூலம் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட வழிவகை செய்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறினார்.  
தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு பெற்ற தூத்துக்குடி கோரம்பள்ளத்தை சேர்ந்த திருமதி.மாரியம்மாள் அவர்கள் கூறியதாவது:-
எனது கணவர் பெயர் திரு.முருகன் கூலி வேலை செய்து அன்றாட குடும்ப செலவுகளை மேற்கொண்டு வருகிறார். எனது 3 குழந்தைகள் உள்ளனர். மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை ஏழை, எளிய மக்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக பொங்கல் பரிசு தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்ந்த திராட்சை,  5 கிராம் ஏலக்காய், 2 அடி கரும்புத்துண்டு ஆகிய பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.100/- ரொக்கமும் வழங்கினார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அனைத்து மக்களும் கொண்டாடக்கூடிய பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டம் மற்றும் ரொக்கம் ரூ.100/-ல் இருந்து ரூ.1,000/- ஆக உயர்த்தி வழங்கி வருகிறார்கள். அமுதம் நியாய விலைக்கடையில் அரிசு பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கம் ரூ.1,000/- வழங்கப்பட்டு வந்தது. பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கம்  எனக்கும் கிடைத்ததால் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இந்த வருடம் பொங்கல் திருநாளை மிகவும் மகிழ்ச்சியுடனும், சிறப்புடனும்  கொண்டாட வழிவகை செய்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறினார்.   
ஏழை, ஏளிய மக்களின் தேவைகளை அறிந்து அவர்களின் சிறமத்தை குறைத்து பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்களை புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கொண்டு வந்தார்கள். தொடர்ந்து மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசு, தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை அறிவித்து அதனை சிறப்பாக செயல்படுத்தி ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி வருகிறது. அதனடிப்படையில், பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கம் ரூ.1,000/- வழங்கும் திட்டம் மிக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ்; பயனடைந்த ஏழை, எளிய மக்கள் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்தார்கள். 
தொகுப்பு
திரு.வெ.சீனிவாசன்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
தூத்துக்குடி.   
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo