Onetamil News Logo

தூத்துக்குடி எஸ்.பி மற்றும் தென்காசி எஸ்.பி ஆகியோர் தலைமையில் விபத்தில் இறந்த எஸ்.ஐ உடலுக்கு 21 குண்டுகள் முழங்க காவல்துறை அணிவகுப்பு மரியாதை   

Onetamil News
 

தூத்துக்குடி எஸ்.பி மற்றும் தென்காசி எஸ்.பி ஆகியோர் தலைமையில் விபத்தில் இறந்த எஸ்.ஐ உடலுக்கு 21 குண்டுகள் முழங்க காவல்துறை அணிவகுப்பு மரியாதை   


தூத்துக்குடி 2020 பிப்ரவரி 23 ;மாசார்பட்டி காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் எஸ்.ஐ. சிவசுப்பிரமணியன்  நேற்று இரவு சாலை விபத்தில் அகால மரணமடைந்துள்ளார். அன்னரின் மறைவிற்கு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த இரங்கல் செய்தி சமர்ப்பிக்கப்படுகிறது.  
மாசார்பட்டி காவல் நிலையத்தில் கடந்த 25.02.2019 முதல் பணியாற்றி வரும் எஸ்.ஐ சிவசுப்பிர மணியன் என்பவர் நேற்று (22.02.2020) இரவு பணியிலிருந்தபோது அச்சங்குளம் என்ற கிராமத்தில் ஒருவரை சிலர் வெட்ட வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், அவரை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தனது பல்சர் பைக்கில்  (TN 69 AV 8055) தூத்துக்குடி - மதுரை பைபாஸ் சாலையில் செல்லும் போது இருட்டில் எவ்வித சிக்னலும் போடாமல் நிறுத்தியிருந்த கண்டெய்னர் லாரி (TN 69 Q 3399) மீது மோதியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இவருக்கு பொதுமக்களிடமிருந்து எந்த தகவல் வந்தாலும், எவ்வித தாமதமும் இல்லாமல் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நடவடிக்கை எடுக்கும் பழக்கம் உள்ளவர்.
இறந்த எஸ்.ஐ. சிவசுப்பிரமணியன் (வயது 34)  2009ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்து, தனது திறமையாலும், தீவிர முயற்சியாலும் 01.02.2011 அன்று எஸ்.ஐ பணிக்கு நேரடியாக தேர்வு செய்யப்பட்டு பணியில் சேர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் தட்டார்மடம் மற்றும் திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையங்களில் பணியாற்றியவர். தற்பொது கடந்த 25.02.2019 முதல் மாசார்பட்டி காவல் நியைலத்தில் பணியாற்றி வருகிறார்.
துடிப்பு மிக்க இளைஞரான இந்த எஸ்.ஐ ரவுடிகளை அடக்குவது, திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்வது போன்றவற்றில் மிகவும் சிறப்பாக பணியாற்றினார். மேலும் இவர் புகார் கொடுக்கவரும் பொதுமக்களின் குறைகளை கனிவுடன் கேட்டு, அவற்றிற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து, அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்து மக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுத்து பணிபுரிந்து வந்தார்.
அன்னாரின் மறைவு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மட்டுமல்லாது தமிழக காவல்துறைக்கு பெரிய இழப்பை தந்துள்ளது. இவருடைய மனைவி பெயர் திருமதி. சுப்புலெட்சுமி (வயது 30) இவருக்கு 2 ½ வயதில் ஒரு மகள், அவர் பெயர் சக்தி  ஸ்ரீ, இவரது மனைவி கர்ப்பமாக உள்ளார். இவரது சொந்த ஊர் தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் தாலுகா, குருவிக்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அத்திப்பட்டி என்ற ஊராகும்.
அன்னாரது உடல், அவரது சொந்த ஊரான அத்திப்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டு, தூத்துக்குடி  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், மற்றும் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  சுகுணா சிங், ஆகியோர் தலைமையில் 21 குண்டுகள் முழங்க காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் அவர் உடல் தகனம் செய்யப்பட்டது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo