தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், குடியரசு தினவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்
தூத்துக்குடி 2021 ஜனவரி 11; தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், குடியரசு தினவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஜ,; தலைமையில், நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியரசு தினவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து, துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஐ,; தலைமையில் இன்று (10.01.2020) நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.செந்தில் ராஜ், தெரிவித்ததாவது:-
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 26.01.2021 அன்று தருவை மைதானத்தில் குடியரசு தின விழா சிறப்பாக நடைபெற உள்ளது. மாநகராட்சியின் மூலம் விழா நடைபெறும் மைதானத்தில் சிறிய சின்டெக்ஸ் தொட்டிகள் மூலம் குடிநீர் வசதிகள் ஏற்படுத்திட வேண்டும். மேலும், மைதானம் தூய்மையாக இருக்க தேவையான குப்பை தொட்டிகள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் மூலம் தூய்மைப்படுத்திட வேண்டும். அவசர காலத்தில் பயன்படுத்துவதற்கு தீயணைப்புத்துறை மூலம் தீ தடுப்பு கருவிகள், தீயணைப்பு வாகனம் மற்றும் பணியாளர்கள் தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். பொது சுகாதாரத்துறையின் மூலம் முதலுதவி சிகிச்சை அளிக்க மருத்துவ குழு மற்றும் 108 அவசர ஊர்தி தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். கொரனா கோவிட் நோய் தொற்றின் காரணமாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் படி குடியரசு தின விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் பொது சுகாதாரதுறையின் மூலம் உடல் வெப்பநிலை கண்டறியும் கருவியின் மூலம் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் சானிடைசர் மற்றும் முககவசம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தியாகிகளை கௌரவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நலத்திட்ட உதவிகள் பெறும் பயனாளிகளின் பட்டியலை முன்கூட்டியே தயார் செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்கிட வேண்டும். மேலும், சிறப்பாக பணியாற்றும் அலுவலர்களை, பணியாளர்களை தேர்வு செய்து நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் சான்றிதழ்கள் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, அனைத்துத்துறை அலுவலர்களும் குடியரசு தினவிழாவில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். மேலும், தங்களது அலுவலகத்தில் பணியாற்றும் பணியாளர்களையும் குடியரசு தினவிழாவில் கலந்து கொள்ள வைக்க வேண்டும். குடியரசு தின விழா தொடர்பான பணிகளை அலுவலர்கள் தொய்வின்றி மேற்கொண்டு நடைபெற உள்ள குடியரசு தினவிழாவை கடந்த ஆண்டை காட்டிலும் சிறப்பாக கொண்டாட அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என தெரிவித்தார்.
கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் (வருவாய்) விஷ்ணு சந்திரன்,தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரான் ஜீத் சிங் கலோன், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் நேர்முக உதவியாளர் வளர்ச்சி பாலசுப்பிரமணியம,; கோட்டாட்சியர்கள் விஜயா, (கோட்டாட்சியர்), செல்வி.தனப்பிரியா (திருச்செந்தூர்), சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மரு. அனிதா, மகளிர் திட்டம் (திட்ட இயக்குநர்) ரேவதி, கூட்டுறவுத்துறை இணை பதிவாளர் ரவிச்சந்திரன,; மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.