Onetamil News Logo

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக பைக் பேரணி தூத்துக்குடிக்கு வந்தது.அவற்றை தூத்துக்குடி ஸ்பிக் நகரில் ரோட்டரி கிளப் சார்பில் வரவேற்பு 

Onetamil News
 

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக பைக் பேரணி தூத்துக்குடிக்கு வந்தது.அவற்றை தூத்துக்குடி ஸ்பிக் நகரில் ரோட்டரி கிளப் சார்பில் வரவேற்பு 


தூத்துக்குடி 2019 செப் 14 ; காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக பைக் பேரணி தூத்துக்குடிக்கு வந்தது.அவற்றை தூத்துக்குடி ஸ்பிக் நகரில் ரோட்டரி கிளப் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
நெல்லை குவின் சிட்டி ரோட்டரி சங்கத்தின் சார்பில் குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம், சிறு குழந்தைகளை பாதுகாப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அதன் உறுப்பினர்கள் சுப்பிரமணியன், நெல்லை நேயன், சுகுமார், மோசஸ், சரணவன், உட்பட 6பேர் கொண்ட குழுவினர் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இருசக்கர வாகன விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். நெல்லையில் துவங்கிய இந்தப் பேரணி கன்னியாகுமரி சென்றது. இவர்கள் அங்கிருந்து திருச்செந்தூர் வழியாக  தூத்துக்குடி வந்தது. இப்பேரணிக்கு தூத்துக்குடி ஸ்பிக் நகர் நுழைவு வாயில் முன்பு ரோட்டரி துணை கவர்னர் ஐபி பாலசேகர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், ஸ்பிக் நகர் ரோடடரி கிளப் தலைவர் பாலமுருகன், செயலாளர் ஜெயகுமார், பியர்ல் சிட்டி ரோட்டரி கிளப் செயலாளர் பொதிகை கண்ணன், தலைவர் விஜயன், மற்றும் தூத்துக்குடியில் உள்ள அனைத்து ரோட்டரி கிளப் நிர்வாகிகளும் இதில் பங்கேற்றனர். பின்னர் இந்த பைக் பேரணி கோவில்பட்டிக்கு  புறப்பட்டுச் சென்றது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo