Onetamil News Logo

தூத்துக்குடியில் பத்திரப்பதிவு அலுவலகத்தை திறந்து வைத்திருப்பதனால் அரசு ஊழியர்கள் பயப்படுகின்றனர் ;மூடக்கோரி ஊழியர்கள் ,நகல் எழுதுவோர் சங்கம் கோரிக்கை விடுப்பு 

Onetamil News
 

தூத்துக்குடியில் பத்திரப்பதிவு அலுவலகத்தை திறந்து வைத்திருப்பதனால் அரசு ஊழியர்கள் பயப்படுகின்றனர் ;மூடக்கோரி ஊழியர்கள் ,நகல் எழுதுவோர் சங்கம் கோரிக்கை விடுப்பு 


தூத்துக்குடி 2020 மார்ச் 26 ;தூத்துக்குடியில் பத்திரப்பதிவு அலுவலகத்தை திறந்து வைத்திருப்பதனால் அரசு ஊழியர்கள் பயப்படுகின்றனர் ;மூடக்கோரி ஊழியர்கள் ,நகல் எழுதுவோர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.   மத்திய மாநில அரசுகள் வரும் ஏப்ரல் 14 வரை பொதுமக்கள் யாரையும் வெளியே வரவேண்டாம் என அறிவித்துள்ளது.
அத்தியாவசிய தேவை தொடர்பான அரசு துறைகளை தவிர அனைத்து அரசு அலுவலகங்களையும் மூடச் சொல்லி உத்திரவிட்டுள்ளது.இந்த அசாதாரண சூழ்நிலையிலும் தமிழக அரசு பத்திரப்பதிவுத் துறை வருவாய் இலக்கை அடையும் நோக்கில் தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு அலுவலங்களை திறந்து வைத்துள்ளது.
சொத்துக்களை வாங்க விற்க வெளிநாடு வாழ் இந்தியர்கள் அதிகமாக வந்து செல்லக்கூடிய இடமாக பத்திரபதிவு அலுவலகங்கள் உள்ளது .இதனால் எந்த வாடிக்கையாளரால் அரசு அலுவலர்களுக்கும் ,ஆவண எழுத்தர்களுக்கும் கொரானா வைரஸ் பரவுமோ என்ற அச்சம் ஏற்ப்பட்டுள்ளது...ஒவ்வொரு பத்திரபதிவுக்கும் 10 க்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் வருகை தருகிறார்கள். சுமார் பத்து ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டால் கூட நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பத்திரப்பதிவுக்கு வருகைதர வாய்ப்புள்ளது.
சமூக விலகலை கருத்தில் கொள்ளாமல் விடுமுறை தினமாக எண்ணி பொதுமக்கள் கூட்டமாக வருவதால் பெருமளவில் வைரஸ் பரவும் அபாயம் ஏற்ப்பட்டுள்ளது.
மேலும் சமூக நன்மை கருதி கோவை மாவட்ட தமிழ்நாடு பத்திர நகல் எழுதுவோர் சங்கம் ஏப்ரல் 14 வரை அனைத்து ஆவண எழுத்தர்களும் அலுவலகம் திறந்து வேலை செய்வதில்லை என முடிவு செய்துள்ளோம்.. ஆனால் பத்திர பதிவு அலுவலகங்கள் விடுமுறை விடாததால்..
பொதுமக்களில் பலர்  பத்திரம் பதிவு செய்து தர  ஒத்துழைக்குமாறு ஆவண எழுத்தர்களை கட்டாயப்படுத்தி வருகின்றனர்...அரசே ஒருபுறம் சமூக விலகலை கட்டாயப்படுத்தியும், மறுபுறம் வருவாய் இலக்கை அடைய அதிக எண்ணிக்கையில் பொதுமக்கள் கூடும் பத்திரப்பதிவு அலுவலகத்தை திறந்தும் வைத்திருக்கிறது. எனவே பொதுமக்களுக்கும், அரசு அலுவலர்களுக்கும் ,ஆவண எழுத்தர்களுக்கும், நோய் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஏப்ரல் 14 வரை பத்திரபதிவு அலுவலகங்களுக்கு விடுமுறை விட உடனடியாக செய்தி வெளியிட்டு உதவுமாறு  கேட்டுக் கொள்கிறோம்.  என்று தமிழ்நாடு பத்திரம் நகல் எழுதுவோர் சங்கம் தூத்துக்குடி கிளை கேட்டுகொண்டுள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo