Onetamil News Logo

தூத்துக்குடி சக்தி வித்யாலயா பள்ளியில் குருபூர்ணிமா நிகழ்ச்சி     

Onetamil News
 

தூத்துக்குடி சக்தி வித்யாலயா பள்ளியில் குருபூர்ணிமா நிகழ்ச்சி     


தூத்துக்குடி 2019 ஆகஸ்ட் 14 ; தூத்துக்குடி மூன்றாவது மைல் சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் குருபூர்ணிமா நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பள்ளியின் துணை முதல்வர் ரூபி ரத்ன பாக்கியம் வரவேற்புரையாற்றினார். சக்தி வித்யாலயா பள்ளியின் முதல்வர் ஜெயாசண்முகம் சிறப்புரையாற்றினார். நமக்கு பேரருள்புரிந்த குருவுக்கு முன்னிற்கும் எண்ணற்ற குருமார்களின் பரம்பரையை பின்நோக்குவோமெனின் ஸ்ரீ தசஷிணா மூர்த்தியே ஆதிகுரு என்று அறியப்படுகிறார். இப்படி சதாசிவனில் தொடங்கி வ்யாசர், ஆதிசங்கரர் வழியாக நமக்கருள் செய்த குரு வரையில் வந்த இந்த குருபரம்பரையை சிறப்பிக்கும் விதமாக ஒவ்வொரு வருடமும் குருபூர்ணிமா எனக் குறிப்பிடப்படும் இப்பூஜையானது பௌர்ணமி அன்று மிகவும் ச்ரத்தையுடன் காலம் காலமாக நம் முன்னோர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நமக்கு புரியும்படி கூறுவோமெனில், இப்பூஜாவானது தற்காலத்தில் பெற்றோர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக கொண்டாடப்படும் ஃபாதர்ஸ்டே மற்றும் மதர்ஸ் டே போன்று நமது குருமார்களுக்கும,; ரிஷிகளுக்கும் நமது நன்றிகளையும், ச்ரத்தா பக்தியையும் காணிக்கையாக்கும் சிறப்பு நிகழ்வாகும் என்று மாணவ, மாணவிகளிடம் எடுத்துக் கூறினார்.
தங்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்றைய தினம் மாணவ, மாணவிகள் ஆசிரியை ஆசிரியர்களுக்கு ஆரத்தி எடுத்து மலர்களை காணிக்கையாக செலுத்தி அவர்களின் ஆசீர்வாதத்தைப் பெற்றுச் சென்றனர்.
நிறைவாக ஆசிரியை செல்வமாரி நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியைகள் சிறப்பாக செய்திருந்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo