Onetamil News Logo

தமிழக அரசின் பற்றாக்குறை 'பட்ஜெட்' நிர்வாக திறமையின்மையை காட்டுகிறது.! நாம் இந்தியர் கட்சி குற்றச்சாட்டு..!!

Onetamil News
 

தமிழக அரசின் பற்றாக்குறை 'பட்ஜெட்' நிர்வாக திறமையின்மையை காட்டுகிறது.! நாம் இந்தியர் கட்சி குற்றச்சாட்டு..!!


தூத்துக்குடி 2020 பிப்ரவரி 17:தமிழக அரசின் பற்றாக்குறை பட்ஜெட்டானது அரசின் நிர்வாக திறமையின்மையை வெளிக்காட்டுகிறது என்று நாம் இந்தியர் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து, நாம் இந்தியர் கட்சி மாநில தலைவர் என்.பி.ராஜா வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசின் தற்போதைய பட்ஜெட்டில் வரும் காலங்களில் அரசுப்பணிக்கு ஆட்கள் சேர்ப்பு குறைக்கப்படுவது
வரவேற்கப்படுகிறது. தனிநபர் வருமானம் குறைவு மற்றும் தொழில்வளம், பொருளாதார நெருக்கடி நிலவும் இந்தசூழ்நிலையில் பற்றாக்குறை பட்ஜெட் என்பது அரசின் நிர்வாக திறமையின்மையை அப்பட்டமாக வெளிக்காட்டுகிறது.

கடந்த ஆண்டு 25ஆயிரம் கோடி பற்றாக்குறையுடன் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளதுபோன்று, இந்த ஆண்டும் 25ஆயிரம் கோடி பற்றாக்குறையில் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளதை பார்க்கும்போது இந்த பற்றாக்குறை பட்ஜெட் தேவையா?
என்ற கேள்வியை எழுப்புகிறது. இப்படி பற்றாக்குறையான பட்ஜெட்டை தாக்கல் செய்தால் ரூ.4லட்சத்து 56ஆயிரம் கோடி கடன் எப்படி தீரும். மேலும், தனிநபர் தான் வைத்திருக்கும் சொத்தில் 25சதவீதத்தை கடனாக வைத்திருத்தால் அவர் 10ஆண்டுகளில் திவால் ஆகி விடுவார்.

நிலையில் அரசும் 25சதவீத கடன் வைத்திருத்தால் இன்னும் 10ஆண்டுகளில் மோசமான சூழ்நிலை நிலவும். தற்போதுள்ள காலகட்டத்தில் இளைஞர்&இளம்பெண்கள் கல்லூரிப்படிப்பு முடிந்தவுடன் பயிற்சி மையங்கள் மூலமாக அரசு வேலைக்காக தங்களை தயார்படுத்துவதில் கவனம் செலுத்துகிறார்கள். சுமார் 500எண்ணிக்கையில் காலியாவுள்ள அரசு பணிக்கு குறைந்தது 2லட்சம் முதல் 5லட்சம் பேர் வரை தயார் செய்கிறார்கள்.
இப்படிப்பட்டநிலையில், தற்போது குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளில் நடைபெற்றுள்ள முறைகேட்டை பார்த்தால் இன்னும் 5ஆண்டுகளுக்கு அரசு பணிகளுக்கு ஆட்கள் சேர்ப்பதை நிறுத்தி வைத்திடவேண்டும்.
தமிழக அரசின் பட்ஜெட்டில் ஆண்டுக்கு சுமார் 96லட்சம் கோடியானது அரசுப்பணியாளர்களுக்கே சம்பளம் மற்றும் ஓய்வூதியமாக கொடுக்கப்படுகிறது. மேலும், அரசு பணி சம்மந்தமான தமிழக அரசின் முடிவினை நாங்கள் வரவேற்கிறோம் என்று அதில் கூறியுள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo